நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பகல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் விளையாட முறன்பட்டு வருகின்றனர். லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் இந்தியா அவர்களுடன் விளையாட மறுத்தது. அதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலும் இந்திய அணி விளையாட மறுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நடைபெற்றது.
Add Zee News as a Preferred Source
ஆனால் போட்டியின் முடிவில் இந்திய அணி வீரர்கள் கைக்குலுக்காமல் சென்றனர். இதையடுத்து இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனான நிலையில், ஆசிய கவுன்சில் தலைவர் நக்வி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால், அவரிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுத்தனர். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் இந்திய அணியின் மீது விமர்சனக்களை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி ரசிகர்கள் மத்தியில் ஒரு திருவிழாவாக பார்க்கப்பட்டாலும், அதன் பின்னால், ஒரு மிகப்பெரிய நாடகம் அரங்கேற்றப்படுகிறது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் அதர்டன் குற்றம்சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக பத்திரிக்கை ஒன்றில் எழுதி உள்ள தனது கட்டுரையில், இந்தியா – பாகிஸ்தான் போட்டி என்பது ஒரு மிகப்பெரிய பொருளாதாரை மதிப்பை கொண்டது. அதனால் ஐசிசி தொடர்களின் ஒளிபரப்பு உரிமம் சுமார் 3 பில்லின் டாலர் வரை விற்கப்படுகிறது. எனவே இந்தியா – பாகிஸ்தான் போட்டி வருமானத்திற்கு மிகவும் அவசியமாகிறது.
ஐசிசி தொடர்களில் பல ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வெவ்வேறு குழுவில் இடம்பெறவே இல்லை. ஒரே குழுவில் இடம் பெற்றுதான் வருகிறது. தொடரில் குறந்தபட்சம் இரு அணிகளுக்கும் இடையே ஒரு போட்டியாவது நடத்திவிட வேண்டும் என்பதற்காகவே குழுக்கள் இப்படி அமைக்கப்படுகிறது. இது அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட் என்பது ஒரு காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவுக்கு ஒரு பாலமாக இருந்தது. ஆனால் தற்போது அது இரு நாடுகளுக்கும் இடையேயான பதட்டங்களுக்கும் அரசியலுக்கும் ஒரு கருவியாக மாறிவிட்டது என்று அவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
மேலும், ஒரு விளையாட்டு அதன் பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப போட்டி அட்டவணையை ஏற்பாடு செய்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இப்போது போட்டி வேறு வழிகளில் சுரண்டப்படுவதால், அதற்கு இன்னும் குறைவான நியாயமும் இல்லை. அடுத்த ஒளிபரப்பு உரிமைச் சுழற்சிக்கு, ஐசிசி நிகழ்வுகளுக்கு முன் போட்டிப் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். மேலும் இரு அணிகளும் ஒவ்வொரு முறையும் சந்திக்கவில்லை என்றால், அது அப்படியே இருக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
About the Author
R Balaji