நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" – ஸ்டாலின் கண்டனம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” எனக் கூச்சலிட்டிருக்கிறார்.

நீதிபதி கவாய்

இருந்தும் அவரைக் காவலர்கள் வெளியேற்றிய பின்னர் “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்” எனக் கூறிவிட்டு, எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்று உச்சநீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி மீதான வெட்கக்கேடான நடவடிக்கை, நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். இது கடுமையான கண்டனத்துக்குரியது.

மாண்புமிகு தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் நீதிமன்றத்தின் வலிமையைக் காட்டுகிறது. ஆனால் அதற்காக நாம் இந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஸ்டாலின்
Mk Stalin – ஸ்டாலின்

தாக்குதல் நடத்தியவர் கூறிய காரணம் இன்றும் அடக்குமுறை மற்றும் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் மனநிலை நம் சமூகத்தில் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

நீதித்துறைப்போன்ற நமது நிறுவனங்களை மதித்து பாதுகாக்கும் மற்றும் நடத்தையில் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் நீதிபதி கவாய் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.