Ind vs Aus: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித்த பின்னர் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு அந்நாட்டு அணியுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி நிர்வாகம் சனிக்கிழமை ஆக்டோபர் 04 அன்று ஒருநாள் தொடருக்கான அணியை அறிவித்தது. ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு சமீபத்தில் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை பெற்ற சுப்மன் கில்லுக்கு ஒருநாள் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது.
Add Zee News as a Preferred Source
ஏனென்றால், ரோகித் சர்மா 2027 உலகக் கோப்பை வரை விளையாடுவாரா என்பது உறுதி கிடையாது என்பதால், அவரை கழற்றிவிட்டு சுப்மன் கில்லை தேர்வுக்குழ் கேப்டனாக தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான தங்களுடைய அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில் கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம் பெறவில்லை. இருப்பினும் இந்திய அணியை தேற்கடிக்கும் வியூகத்தில் அந்த அணி நிர்வாகம் வீரர்களை தேர்வு செய்துள்ளது.
பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக தேர்வாகவில்லை. அவருக்கு பதிலாக கேப்டன் பதவியை மிட்செல் மார்ஷுக்கு கொடுத்துள்ளனர். அவரது தலைமையில், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் டிராவிஸ் ஹெட், மேத்தியூ ஷார்ட், ஜோஷ் இங்கிலீஸ், அலெக்ஸ் கேரி என தரமான வீரர்களை இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இறக்கி உள்ளது ஆஸ்திரேலியா அணி.
அதேபோல் டி20 அணியில் டிம் டேவிட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிராவிஸ் ஹெட் போன்று பேட்டிங்கில் அதிரடி காட்டும் வீரர்களும் அடம் சாம்பா, நாதன் எலிஸ், ஜோஷ் ஹேசல்வுட் போன்ற பந்து வீச்சில் அசத்தும் வீரர்களையும் களமிறக்கி உள்ளனர்.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா
ஆஸ்திரேலியா டி20ஐ அணி (முதல் இரண்டு ஆட்டங்கள்): மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜம்பா.
About the Author
R Balaji