நிசானின் புதிய எஸ்யூவிக்கு Tekton என பெயர் சூட்டப்பட்டுள்ளது. | Automobile Tamilan

டஸ்ட்டர் அடிப்படையிலான மாடலை நிசான் நிறுவனம் டெக்டன் என்ற பெயரில் விற்பனைக்கு ஜூன் 2026ல் வெளியிட உள்ள நிலையில் டிசைன் படங்கள் மற்றும் முக்கிய தோற்ற விபரங்கள் தொடர்பான பல முக்கிய அம்சங்களை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ரெனால்ட் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள டெக்டானை உள்நாட்டில் மட்டுமல்லாமல் பல்வேறு சர்வதேச சந்தைகளில் ஏற்றுமதி செய்யப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Nissan Tekton SUV

“Tekton” என்ற வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டுள்ள நிலையில், இதற்கான பொருள் கைவினைஞர் அல்லது கட்டிக்கலைஞர் ( “craftsman” or “architect”) ஆகும், இந்த காருக்கான டிசைனை, மிக நீண்ட காலமாக மற்றும் மிகவும் பிரபலமான பல்வேறு நாடுகளில் வென்ற பேட்ரோலில் இருந்து வடிவமைப்ப்புக்கான டிசைனை பெறுகிறது. அடுத்த ஆண்டு வரும்போது, ​​இது வலுவான நம்பகத்தன்மை, பிரீமியம் கைவினைத்திறன் மற்றும் மேம்பட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வெளிப்படுத்தும்.

பானட் மற்றும் தனித்துவமான C-வடிவ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் விளக்கு என அனைத்தும் பேட்ரோலை நினைவுக்கு கொண்டு வரும் வகையில் அமைந்திருப்பதுடன், பக்கவாட்டில் உயரமான வீல் ஆர்ச், புதிய டிசைனில் அலாய் வீல் மற்றும் மிக நேரத்தியான வகையில் சி-பில்லர் பகுதி வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் பானெட் மேல் மற்றும் டெயில்கேட்டில் டெக்டன் பெயர்ப்பலகை உள்ளது.

இன்டீரியர் தொடர்பாக எந்த உறுதியான தகவலையும் தெரிவிக்கவில்லை என்றாலும், மிக சிறப்பான வகையில் இரட்டை வண்ணத்துடன், டிஜிட்டல் கிளஸ்ட்டர், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்ஜின் ஆப்ஷனை பற்றி தெளிவுப்படுத்தவில்லை என்றாலும் டஸ்ட்டரில் இருந்து பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைபரிட் என இரு ஆப்ஷனை பெற உள்ள டெக்டனுக்கு போட்டியாக க்ரெட்டா, விக்டோரிஸ், செல்டோஸ், எலிவேட், ஆஸ்டர் உள்ளிட்ட மாடல்களுடன் வரவுள்ள டஸ்ட்டர் ஆகியவற்றை டெக்டான் எதிர்கொள்ள உள்ளது.

Related Motor News

No Content Available

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.