Dude: “அந்தப் பாடலைத்தான் என் Ex Girl Friendக்கு முதலில் பாடிக் காட்டினேன்" – பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்’ திரைப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வருகிறது.

`லவ் டுடே’, `டிராகன்’ என இரு வெற்றிப் படங்களுக்குப் பிறகு இத்திரைப்படம் திரைக்கு வருவதால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

Dude - Pradeep Ranganathan
Dude – Pradeep Ranganathan

சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் `ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்குப் பேட்டியளித்திருக்கிறார்.

அதில் அனிருத் இசையமைத்த `எனக்கென யாருமில்லையே’ என்ற சுயாதீன பாடல் அவருக்கு எவ்வளவு நெருக்கமானது, அந்தப் பாடல் இப்போது `LIK’ படத்தில் பயன்படுத்தியது போன்ற விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், “‘எனக்கென யாருமில்லையே’ பாடல் வந்தபோது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தேன். அந்தப் பாடல் 2014-ல் வெளியாகியிருந்தது.

சொல்லப்போனால், நான் என்னுடைய முன்னாள் காதலிக்குப் பாடி காண்பித்த முதல் பாடலும் அதுதான். நான் என்னுடைய பாடும் திறமையை அவளிடம் காண்பித்தேன்.

அந்த ஆடியோவை அவர் தன்னுடைய நண்பர்களுக்கும் காண்பித்தார். எனக்கும் அந்தப் பாடலுடன் நிறைய நினைவுகள் இருக்கின்றன. தொடர்ந்து பாடும் அளவுக்கு அது எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

பிரதீப் - விக்னேஷ் LIK
பிரதீப் – விக்னேஷ் LIK

விக்னேஷ் சிவன் சார் ‘LIK’ கதையை எனக்குச் சொல்லும்போது, ‘இந்த இடத்தில் இந்தப் பாடல் வரும்’ என்று சொன்னார்.

அதைக் கேட்டதும், இந்தப் படத்தில் நான் நடித்தே ஆக வேண்டும் என்று தோன்றிவிட்டது.

அந்தப் பாடலின் ஒரு பகுதியாக நான் இருப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. ‘LIK’ படத்தில் நான் நடிக்க ஐந்து காரணங்கள் இருக்கின்றன.

அதில் ஒரு காரணம் இந்தப் பாடலும்தான். டீசரில் பாடல் இடம்பெற்ற பகுதி பெரிதும் வெற்றி பெறும் என்று நினைத்ததைப் போலவே, பலரும் அவ்வாறு உணர்ந்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரிந்தது,” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.