அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமிக்கவுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு 

சென்னை: அரசு கலை அறி​வியல் கல்​லூரி​களில் ஆசிரியர் தேர்வு வாரி​யம் (டிஆர்​பி) மூலம் விரை​வில் 2,708 உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​படும் என உயர்​கல்​வித் துறை அமைச்​சர் கோவி.செழியன் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஒவ்​வொரு நாளும் மருத்​து​வம், உயர்​கல்வி அவற்​றின் மேம்​பாட்​டுக்​காக தமிழக முதல்​வர் பல்​வேறு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறார்.

உயர் கல்​வி​யில் தமிழக மாணவர்​கள் என்​றென்​றும் உயர்ந்த நிலை​யில் திகழ வேண்​டும் என்​ப​தற்​காக​வும், தொழில்​நுட்​பத் துறையில் உலக நாடு​களுக்​கிடையே உள்ள போட்​டி​யில் சிறந்து விளங்க வேண்​டும் என்ற எண்​ணத்​தி​லும், வேலை தேடு​பவ​ராக இல்லாமல் தொழில்​முனை​வோ​ராக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக​வும் ‘நான் முதல்​வன்’ என்ற திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வருகிறது.

மாணவ-​மாணவி​கள் உயர்​கல்வி பெற பொருளா​தா​ரம் ஒரு தடை​யாக இருக்​கக் கூடாது என்​ப​தற்​காக​வும் சுய மரி​யாதை​யுடன் உயர்​கல்வி பயில​வும் ‘புது​மைப் பெண்’. ‘தமிழ்ப் புதல்​வன்’ போன்ற திட்​டங்​கள் மூலம் மாதந்​தோறும் ரூ.1000 கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

கடந்த நான்​கரை ஆண்​டு​களில் 37 புதிய அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. நடப்பு கல்​வி​யாண்​டில் மட்​டும் 16 புதிய கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்டு 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கூடு​தல் மாணவர் சேர்க்கை இடங்​களுக்​கும் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

நவீன தொழில்​நுட்​பத்​துக்கு ஏற்ப அந்​தந்த பகு​தி​யில் உள்ள தொழில்​முறைக்கு ஏற்ற பல்​வேறு புதிய பாடப் பிரிவு​களும் தொடங்​கப்​பட்​டுள்​ளன. மாணவர்​களின் கல்வி கற்​கும் திறன் எந்த வகை​யிலும் பாதிப்​படையக் கூடாது என்ற எண்​ணத்​தில் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் 2,708 உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​களை நிரந்​தர​மாக நிரப்ப முதல்​வர் ஆணை​யிட்​டுள்​ளார். இந்த உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​கள் நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் விரை​வில் நிரப்​பப்​படும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.