அரசு தலைமை பொறுப்பில் 25-வது ஆண்டு: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

புதுடெல்லி: கடந்த 2001-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி குஜ​ராத் முதல்​வ​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்​றார். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் வரை அவர் குஜ​ராத் முதல்​வர் பதவி​யில் நீடித்​தார். கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம்தேதி அவர் நாட்​டின் பிரதம​ராக பதவி​யேற்​றார். தொடர்ந்து 3-வது முறை​யாக அவர் பிரதம​ராக பதவி​யேற்று நாட்டு மக்​களுக்கு சேவை​யாற்றி வருகிறார்.

அரசின் தலை​மைப் பொறுப்​பில் 25-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்ட பதிவு​களில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 2001-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி குஜ​ராத் முதல்​வ​ராக பதவி​யேற்​றேன். பூகம்​பம், புயல், வறட்​சி, அரசி​யல் குழப்​பம் நிறைந்த காலத்​தில் முதல்​வ​ராக பணி​யாற்​றினேன். பல்​வேறு சவால்​களை கடந்து குஜ​ராத்தை கட்​டி​யெழுப்​பினேன். நாட்டு மக்​களுக்கு திறம்பட சேவை​யாற்​றினேன்.

நான் முதல்​வ​ராக பதவி​யேற்​ற​போது எனது அம்மா ஓர் அறி​வுரையை கூறி​னார். ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்​டும். எந்த சூழலிலும் ஒரு பைசாகூட லஞ்​சம் வாங்​கக்​ கூ​டாது என்று அவர் அறி​வுறுத்​தி​னார். அவரது அறி​வுரை, ஆலோ​சனை என்னை இன்​றள​வும் வழிநடத்திக் கொண்​டிருக்​கிறது. கடந்த 2014-ம் ஆண்​டில் மக்​கள் ஆதர​வால் நாட்​டின் பிரதம​ராக பதவி​யேற்​றேன். கடந்த 11 ஆண்டு ஆட்​சி​யில் 25 கோடி பேர் வறுமை​யில் இருந்து மீட்​கப்​பட்டு உள்​ளனர். உலக பொருளா​தா​ரத்​தில் நம்​பிக்கை நட்​சத்​திர​மாக இந்​தியா திகழ்​கிறது. அனைத்து துறை​களி​லும் சுய சார்பு இந்​தியா திட்​டம் மிகப்​பெரிய வெற்றி பெற்று இருக்​கிறது.

நாட்​டுக்கு சேவை​யாற்​று​வது எனக்கு கிடைத்த மிகப்​பெரிய பாக்​கி​யம். இந்​திய அரசி​யலமைப்பு சட்​டம் எனக்கு வழி​காட்​டி​யாக விளங்​கு​கிறது. வளர்ச்சி அடைந்த இந்​தியா என்ற லட்​சி​யத்தை எட்ட இன்​னும் கடின​மாக உழைப்​பேன். என் மீது அன்​பும் நம்​பிக்​கை​யும் வைத்த இந்​திய மக்​களுக்​கு மன​தார நன்​றி தெரி​வித்​துக்​ கொள்​கிறேன்​.இவ்​​வாறு பிரதமர்​ மோடி தெரி​வித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.