இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த போட்டிகளை முடித்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் விளையாட இருக்கிறது. இத்தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். சாம்பியன் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பை என வென்று கொடுத்த கேப்டன் ரோகித் சர்மாவை களத்தில் காண ரசிகர்கள் ஆவளாக இருந்தனர்.
Add Zee News as a Preferred Source
இந்த சூழலில், கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 04) அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு அறிவித்தது. இதில் இதுவரை ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தனர். இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இந்த முடிவை விமர்சித்து வந்தனர்.
இந்திய அணியை அறிவித்த பின்னர் கேப்டன் மாற்றம் குறித்து விளக்கம் அளித்த அஜித் அகர்கர், 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். இந்திய அணிக்கு வரும் காலங்களில் ஒருநாள் போட்டிகள் குறைவாகவே உள்ளது. அதனால் இப்போதே கேப்டனை மாற்றி இருக்கிறோம். மேலும், மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் தனித்தனியாக கேப்டன்கள் இருந்தால் அது பயிற்சியாளருக்கு கடினமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ரோகித் சர்மாவை இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது அவமரியாதையின் அடையாளம் என்று முன்னா வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய மனோஜ் திவாரி, தற்போது இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மற்ற நிர்வாகிகளை விட ரோகித் சர்மா, அஸ்வின், விராட் கோலி ஆகியோர் பல சாதனைகளை செய்துள்ளனர். எனவே பயிற்சியாளர் கூறும் விஷயங்களுக்கு இந்த சீனியர் வீரர்களுக்கு கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது. இதன் காரணமாகவே சீனியர் வீரர்கள் அணியில் இருக்கக்கூடாது என கம்பீர் முடிவெடுத்திருக்கிறார்.
ரோகித் சம்ரா இந்தியாவிற்கு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுக்கொடுத்தார். டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். மேலும், 2023 உலகக் கோப்பையில் இறுதி போட்டி வரை இந்தியாவை அழைத்து சென்றுள்ளார். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் அவரது செயல்திறன் சிறப்பாகவே இருந்துள்ளது. அவர் உண்மையிலேயே அதிக மரியாதைக்கு தகுதியானர்வர் என நான் நம்புகிறேன். எனவே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது அவமரியாதையின் தெளிவான அவமானமாக நான் பார்க்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
About the Author
R Balaji