வாஷிங்டன்,
அமெரிக்காவின் டென்னசி மாகாணம் நாஷ்வில் நகரை சேர்ந்தவர் ஜெஸ்டின் புல்லர் (வயது 35). இவர் விமானத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஜெஸ்டின் 46 வயதான நபருக்கு ஸ்கை டைவிங் பயிற்சி கொடுத்துள்ளார். விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் அந்த நபர் கீழே குதித்த நிலையில், ஜெஸ்டின் பாராசூட் இன்றி குதித்துள்ளார்.
இதில், மின்னல் வேகத்தில் தரையில் விழுந்த ஜெஸ்டின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெஸ்டினிடம் பயிற்சிக்கு பெற வந்திருந்த நபரின் பாரசூட் மரக்கிளையில் சிக்கியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மரக்கிளையில் சிக்கிய நபரை மீட்டனர். மேலும், தரையில் விழுந்து உயிரிழந்த ஜெஸ்டினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.