ரஷ்ய அதிபர் புதின் பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 1952-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி ரஷ்​யா​வின் செயின்ட் பீட்​டர்​ஸ்​பர்க் நகரில் பிறந்​தார். அவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்​டாடி​னார்.

இதையொட்டி பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி​வித்​தார். இதைத் தொடர்ந்து இரு தலை​வர்​களும் பிராந்​திய, சர்​வ​தேச விவ​காரங்​கள் குறித்து முக்​கிய ஆலோ​சனை நடத்​தினர். குறிப்​பாக உக்​ரைன் போர், இஸ்​ரேல்- ஹமாஸ் இடையி​லான அமை​திப் பேச்​சு​வார்த்தை குறித்து இரு​வரும் ஆலோ​சித்​த​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.