இன்று மதுரை வருகிறார் தோனி

மதுரை,

வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் ஆஸ்பத்திரி அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் என பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது. மழை பெய்தால் விரைவாக தண்ணீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து மின்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 7,300 இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மைதானம் அதன் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான். இதை இந்திய முன்னாள் கேப்டன் தோனி இன்று திறந்து வைக்கிறார். எதிர்காலத்தில் இங்கு டி.என்.பி.எல்., ஐ.பி.எல்., ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க வாய்ப்புள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.