சென்னை; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 16ந்தேதி ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18ந்தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்படும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்பு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதித் திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. […]
