ஊரெங்கும் இருமலும் சளியுமாக இருக்கிறது. பிரச்னை ஆரம்பிக்கையிலேயே இந்த ‘தங்க கஷாயத்தைக்’ கொடுத்தால், உடனே இந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்கிறார் சித்த மருத்துவர் அமுதா தாமோதரன்.
இந்தக் கஷாயத்தின் செய்முறையையும், பலன்களையும் இங்கே விவரிக்கிறார் அவர்.

தேவையானவை:
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பனை சர்க்கரை (Palm sugar) – சுவைக்கு ஏற்ப, பால் – 1 டம்ளர், திரிகடுகப் பொடி – 10 மி.கி (சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவில் கலந்ததுதான் திரிகடுகப் பொடி.)
செய்முறை:
பாலை காய்ச்சி, மஞ்சள் தூள், பனை சர்க்கரை, திரிகடுகப் பொடியைக் கலந்து, தினமும் அருந்தலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
சளி, காய்ச்சல் இருப்பவர்கள் குடித்துவர, காய்ச்சல் குணமாகும். சளித் தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
சுக்கு, கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடியது. ரத்தம் கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளும்.
விஷத்தை முறிக்கும் சக்தி மிளகுக்கு உண்டு. உடலில் உள்ள தொற்றுகளை நீக்கும்.
திப்பிலி, நுரையீரலில் உள்ள சளியைப் போக்கும். இளைப்பு பிரச்னை (Wheezing) சரியாகும். வயிற்றில், பசிக்காக சுரக்கும் என்சைம்களை சீராக சுரக்கவைக்கும்.
கல்லீரல் பாதிப்பைச் சரியாக்கும்.
சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பாலை கொடுத்துவர, பசியைத் தூண்டி, உணவைச் சாப்பிடத் தூண்டும்.