காசா போர் நிறுத்த ஒப்பந்தம் பணயக்கைதிகள் விடுதலை நிம்மதி அளிக்கிறது – இங்கிலாந்து பிரதமர்

லண்டன்,

காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஹமாஸ் பிடியில் இருந்த பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.அதற்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டது ஆழ்ந்த நிம்மதி அளிக்கிறது. இஸ்ரேல் என்ஜினீயர் ஏவிநேடன், ஹமாஸ் இயக்கத்தின் பிடியில் சிக்கி சித்ரவதை செய்யப்பட்டது நினைவில் நிற்கிறது. அவரது குடும்பத்தை சந்தித்தேன். 2 ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்த சித்ரவதையையும், வேதனையையும் எவராலும் உண்மையாக புரிந்து கொள்ள முடியாது. என் சிந்தனைகள் அவர்களுடனே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.