டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள் | TVS Star City Plus on road price and specs

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் 110cc சந்தையில் கிடைக்கின்ற ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் என்ஜின், மைலேஜ், நிறங்கள், வசதிகள், போட்டியாளர்கள் மற்றும் ஆன்-ரோடு விலை என அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

TVS Star city Plus

பட்ஜெட் விலையில் சிறப்பான மைலேஜ் வழங்குவதுடன் பல்வேறு நவீன அம்சங்களை கொண்டுள்ள ஸ்டார் சிட்டி பிளஸில் 109.7cc என்ஜின் பொருத்தப்பட்டு, அகலமான இருக்கை மற்றும் பல்வேறு பனி சூழலுக்கு ஏற்றதாக அமைந்திருந்தாலும் வலுவான போட்டியாளர்கள் மத்தியில் மிக குறைந்த எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்து வருகின்றது.

7350rpm-ல் 8.08 bhp பவர் மற்றும் 4500rpm-ல் 8.7NM டார்க் வெளிப்படுத்துகின்ற 109.7cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்பட்டு 4 வேக கியர்பாக்ஸ் கொண்டு லிட்டருக்கு 68-75 கிமீ மைலேஜ் தரவல்லதாக உள்ளது.

  • Star City+ Drum – ₹ 71,300
  • Star City+ Disc – ₹ 75,000

(எக்ஸ்-ஷோரூம் தமிழ்நாடு)

2025 TVS Star City Plus on-Road Price Tamil Nadu

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்டார் சிட்டி பிளஸ் 110யின் ஆன்-ரோடு விலை தமிழ்நாட்டின் முன்னணி மெட்ரோ நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், வேலூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் மற்ற மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். ஆன்-ரோடு விலை டீலர்களை பொறுத்து மாறுபடும்.

  • Star City+ Drum – ₹ 88,119
  • Star City+ Disc – ₹ 92,345

(All Price On-road Tamil Nadu)

  • Star City+ Drum – ₹ 84,406
  • Star City+ Disc – ₹ 87,691

(All Price on-road Pondicherry)

240 மிமீ டிஸ்க் அல்லது 130மிமீ டிரம் பிரேக் என இரு விதமான முன்பக்க ஆப்ஷனை பெற்று டிரம் பிரேக்கினை பின்புறத்தில் பொதுவாக 110 மிமீ பெற்று கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்தை பெற்றுள்ளதால் சிறப்பான பிரேக்கிங் திறனை கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை டெலிஸ்கோபிக் முன்புறத்திலும், ட்வீன் ஷாக் அப்சார்பருடன் 17 அங்குல வீலினை பெற்று ட்யூப்லெஸ் டயரை பெற்றதாக அமைந்துள்ளது.

10 லிட்டர் பெட்ரோல் டேங்க் உடன் ஸ்டார் சிட்டி+ பரிமாணங்கள் 1,984 மிமீ நீளம், 750 மிமீ அகலம் மற்றும் 1,080 mm உயரம் பெற்று, 1,260 மிமீ வீல்பேஸ் கொண்டதாக உள்ளது. 172 மிமீ வீல்பேஸ் மற்றும் 115-116 கிலோ எடை கொண்டு டீயூப்லெஸ் டயர் கொண்டுள்ள ஸ்கூட்டரில் முன்புறத்தில் 2.75 X 17 41P 4PR மற்றும் 3.0 X 17 50P 6PR உள்ளது.

tvs star city plus logotvs star city plus logo

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ 110 நுட்பவிரங்கள்

என்ஜின்
வகை ஏர் கூல்டு, 4 stroke
Bore & Stroke 53.5 x 48.8 mm
Displacement (cc) 109.7cc
Compression ratio 10.0:1
அதிகபட்ச பவர் 8.08 hp (6.03Kw) at 7,350 rpm
அதிகபட்ச டார்க் 8.7Nm @ 4,500rpm
எரிபொருள் அமைப்பு Fuel injection (FI)
டிரான்ஸ்மிஷன் & சேஸ்
ஃபிரேம் கார்டிள் டபூள் ஃபிரேம்
டிரான்ஸ்மிஷன் 4 ஸ்பீடு
கிளட்ச் டிரை டைப்
சஸ்பென்ஷன்
முன்பக்கம் டெலிஸ்கோபிக்
பின்பக்கம் அட்ஜெஸ்டபிள் ட்வீன் ஷாக் அப்சார்பர்
பிரேக்
முன்புறம் டிரம் 130 mm/240 mm டிஸ்க்
பின்புறம் டிரம் 110 mm (with SBT)
வீல் & டயர்
சக்கர வகை அலாய்
முன்புற டயர் 2.75 X 17 41P 4PR ட்யூப்லெஸ்
பின்புற டயர் 3.0 X 17 50P 6PR ட்யூப்லெஸ்
எலக்ட்ரிக்கல்
பேட்டரி 12V-5Ah MF பேட்டரி
ஸ்டார்டர் வகை எலக்ட்ரிக் செல்ஃப்/கிக்
பரிமாணங்கள்
நீளம் 1984 mm
அகலம் 750 mm
உயரம் 1050 mm
வீல்பேஸ் 1260 mm
இருக்கை உயரம் 760 mm
கிரவுண்ட் கிளியரண்ஸ் 172 mm
எரிபொருள் கொள்ளளவு 10 litres
எடை (Kerb) 115-116kg

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி+ 110 நிறங்கள்

இந்த ஸ்டார் சிட்டி+ பைக்கின் டிரம் வகையில் கருப்பு நிறத்தினை அடிப்படையாக கொண்டு கிரே, நீலம், சிவப்பு, மற்றும் பச்சை பெற்று,  வகையில் கருப்பு நிறத்துடன் பச்சை மற்றும் சிவப்பு, என மொத்தமாக 6 நிறங்கள் உள்ளது.

tvs star city plus clustertvs star city plus cluster

2025 TVS Star City Plus rivals

டிவிஎஸ் மோட்டாரின் ஸ்டார் சிட்டி பிளஸ் போட்டியாளர்களாக ரேடியான், ஸ்போர்ட், ஸ்பிளெண்டர்+ ஷைன் 100, உள்ளிட்ட மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.

Faqs About TVS Star City Plus

No schema found.

TVS Star City Plus Image Gallery

 

Related Motor News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.