Dude: "ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவான், ஆனா"- நெகிழும் சாய் அபயங்கர் பெற்றோர்

பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் `டூட்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

பிரதீப்புடன் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் `டூட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.

ரோகினி, சரத்குமார் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவின் இளம் சென்சேஷனாக வலம்வரும் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

 `டூட்' படம்
`டூட்’ படம்

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்டோபர் 13) நடைபெற்றது.

இதில் சாய் அபயங்கரின் பெற்றோரும், பிரபல பாடகர்களுமான திப்பு – ஹரிணி இருவரும் கலந்துகொண்டிருந்தனர்.

அப்போது சாய் அபயங்கர் குறித்து மேடையில் பேசிய திப்பு, “சாய் அபயங்கருக்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி.

அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 2024 ஜனவரி 22 வரைக்கும் சாய் இப்படி ஒரு இடத்திற்கு வருவான் என்று எங்களுக்குத் தெரியாது.

அன்றைக்குத்தான் ‘Think Music’ஓட ‘கட்சி சேரா’ பாடல் வெளியானது.

இன்றைக்கு அவன் இப்படி ஒரு இடத்திற்கு வருவதற்கு காரணம் ரசிகர்களின் அன்பும், பிரார்த்தனையும் தான். அவர்களுக்கு ரொம்ப நன்றி” என்று கூறியிருக்கிறார்.

சாய் அபயங்கரின் பெற்றோர்
சாய் அபயங்கரின் பெற்றோர்

தொடர்ந்து பேசிய ஹரிணி, “என் பையனுக்கு கிடைத்த இந்த வரவேற்பு எனக்குக் கிடைத்த மாதிரி இருக்கிறது.

அவனுடைய கடின உழைப்பிற்காகவே மேலும் மேலும் வெற்றி கிடைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வொர்க் பண்ணுவார். எங்களுக்கே அது வியப்பாகத்தான் இருக்கும்.

சாய்க்கு சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.