கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த தொடர் முடிந்த கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி. இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மே மாதம் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்தார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. ஃபிட்டாக இருக்கும் விராட் கோலி ஏன் ஓய்வை அறிவித்தார் என பலரும் புலம்பினர்.
Add Zee News as a Preferred Source
விராட் கோலி ஓய்வு
தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடும் முடிவில் அவர் உள்ளார். ஆனால் அதுவும் வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் வரைதானா? என்றும் அவர் அதன்பின் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்துதான் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார்.
தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு அந்நாட்டுக்கு எதிரான ஒருநாள் தொடர் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட உள்ளனர். ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ், இருவரையும் பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கும் என்று கூறி உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், விராட் கோலிக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட அதிக ஆர்வம் இருக்கிறது என்று முன்னாள் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆலோசகருமான தினேஷ் கார்த்திக் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விராட் கோலி அதிக ஆர்வத்துடன் உள்ளார். அவர் அதற்காக லண்டனில் ஓய்வில் இருந்தபோதும் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். வாரத்திற்கு 2 முதல் 3 செஷன்கள் பேட்டிங் பயிற்சி செய்தார். விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தாலும் பயிற்சியில் இருந்து பிரேக் எடுக்கவில்லை. இதன் மூலம் அவர் 2027 உலகக் கோப்பையில் விளையாட முடிவு செய்துள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் விராட் கோலி
விராட் கோலி இதுவரை 302 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் 14181 ரன்களை குவித்து 57.88 சராசரியுடன் உள்ளார். இதில் 74 அரை சதங்கள் மற்றும் 51 சதங்களை விளாசி உள்ளார்.
About the Author
R Balaji