விருதுநகர்: தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று முதல் அக்டோபர் 21ம் தேதி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஐப்பசி மாதம் சனி பிரதோஷம், அமாவாசை நாட்களில் சதுரகிரி கோயிலுக்கு செல்லத் தடை விதித்து அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று முதல் (17ந்தேதி) அக்டோபர் 21ம் தேதி வரை […]
