சென்னை: வழக்கறிஞர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தில் சென்னை காவல்துறைமீது உயர்நீதிமன்றம் கடுமையாக சாடியது. காவல்துறையினன் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததுடன், யாரை திருப்தி செய்ய காவல்துறை வேலை செய்கிறது என்று கேட்டதுடன், தாக்குதலுக்கு ஆளானவர்மீது எப்படி வழக்கு பதியப்பட்டது என கேள்வி எழுப்பியது. சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் அருகே அக்டோபர் 7ஆம் தேதி, வழக்கறிஞர் ராஜிவ் காந்தியின் இரு சக்கர வாகனம் மீது, வி.சி.க., தலைவர் திருமாவளவன் சென்ற கார் மோதியது. இதையடுத்து வண்டியை […]
