பிரதமர் மோடியின் தீபாவளிப் பரிசு மக்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் குறித்து டெல்​லி​யில் நேற்று மத்​திய நிதித்​துறை அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், மத்​திய வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல், மத்​திய ரயில்வே துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்​தனர்.

மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் பேசும்​போது “ஜிஎஸ்டி குறைப்​பால் உணவு பணவீக்​கம் கணிச​மாக குறைந்​துள்​ளது. ஜி.எஸ்​.டி. சீர்​திருத்​தம் மூலம் எலக்ட்​ரானிக் பொருள் விற்​பனை சாதனை படைத்​துள்​ளது” என்​றார்.

பின்​னர் மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் பேசி​ய​தாவது: ஜிஎஸ்டி குறைப்​பால் நுகர்​வோருக்கு பலன் கிடைத்​துள்​ளது. கார், ஏசி, வாஷிங் மெஷின், டி.​வி. உள்​ளிட்ட பொருட்​களின் விற்​பனை அதி​கரித்​துள்​ளது. பண்​டிகை காலத்​தில் பைக்​கு​கள், டிராக்​டர்​கள் விற்​பனை வேக​மாக உயர்ந்​துள்​ளது.

அதே​போல் கார்​கள் விற்​பனை மிக​வும் அதி​கரித்​துள்​ளது. பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்த தீபாவளி பரிசு மக்​களை முழு​மை​யாக சென்​றடைந்​துள்​ளது. உள்​நாட்டு பொருட்​களுக்கு மக்​கள் முன்​னுரிமை அளித்​துள்​ளனர். தற்​சார்பு இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது.

மக்​கள் தினசரி பயன்​படுத்​தும் 54 பொருட்​களை மத்​திய அரசு உன்​னிப்​பாகக் கண்​காணித்து வந்​தது. அவற்​றில் ஒவ்​வொன்​றி​லும், ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​களால் ஏற்​படும் வரிச் சலுகை நுகர்​வோருக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது என்​ப​தைக் கண்​டறிந்​தோம். பிரதமரின் தீபாவளி பரிசு அறி​விப்​பின் நோக்​கம் நிறைவேறி​யுள்​ளது. இவ்​வாறு அவர் கூறினார்.

மத்​திய வர்த்​தகத்​துறை அமைச்​சர் பியூஷ் கோயல் கூறும்​போது, “நவ​ராத்​திரி​யின் முதல் நாளன்று கொண்டு வரப்​பட்ட ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் வரவேற்பை பெற்று இருக்​கிறது. அனைத்து தரப்​பினரும் பயன் அடைந்து வரு​கின்​றனர். வி​யா​பாரம் அதி​கரித்​துள்​ள அதே நேரத்​தில்​ சேமிப்​பும்​ பல மடங்​கு உயர்​ந்​துள்​ளது” என்​றார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.