சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, Washing Machine-இல் வெளுப்பது எப்படி? என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளை பகிர்ந்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதில் தெரிவித்துள்ளார். அதில் தற்போது திமுக ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் சேகர்பாபு, செந்தில் பாலாஜி, உள்பட பலர் அதிமுகவில் இருந்து கட்சி தாவியவர்கள்தானே, அவர்களை வெளுத்தது எப்படி என கேள்வி எழுப்பி உள்ளார். […]
