கரீபியன் கடலில் போதைப் பொருட்கள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பலை அழித்தது அமெரிக்கா

வாஷிங்டன்: லத்​தீன் அமெரிக்க நாடு​களில் இருந்து கரீபியன் கடல் வழி​யாக அமெரிக்கா​வுக்கு அதி​விரைவு படகு​கள் மூலம் போதைப் பொருட்​கள் கடத்​தல் நடை​பெற்று வந்​தது. கடந்த 2 மாதங்​களாக போதைப் பொருட்​களை கடத்​திவந்த 6 அதி விரைவு படகு​களை அமெரிக்க படைகள் கரீபியன் கடலில் சுட்டு வீழ்த்​தின. இந்த படகு​கள் வெனிசுலா​வில் இருந்து வந்​திருக்​கலாம் என நம்​பப்​படு​கிறது.

இந்​நிலை​யில் கரீபியன் கடல் பகு​தி​யில் இரவு நேரத்​தில் ஒரு நீர்​மூழ்கி கப்​பல், பாதி​யளவு தண்​ணீரில் மூழ்​கியபடி வேக​மாக சென்​றுள்​ளது. அதில் உள்​ளவர்​களை​யும் தொடர்பு கொள்ள முடிய​வில்​லை.

அது போதைப் பொருட்​கள் கடத்​தும் நீர்​மூழ்கி கப்​பல் என உறுதி செய்​யப்​பட்​ட​வுடன் அதை நடுக்​கடலில் அமெரிக்க படைகள் குண்டு வீசி தகர்த்​தன. இந்த தாக்​குதலில் நீர்​மூழ்கி கப்​பலில் பயணம் செய்த இரு​வர் உயி​ரிழந்​தனர். போதைப் பொருள் கடத்​தலில் தொடர்​புடைய இரு​வர் உயிருடன் பிடிபட்​டனர். அவர்​கள் ஈக்​கு​வ​டார் மற்​றும் கொலம்​பியா நாட்​டைச் சேர்ந்​தவர்​கள் என அடை​யாளம் காணப்​பட்​டது.

25,000 பேர் இறந்​திருப்​பர்: இந்த தாக்​குதல் வீடியோவை ‘ட்​ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்​தில் பகிர்ந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யிருப்​ப​தாவது:

இந்த போதைப் பொருட்​கள் நுழைந்​திருந்​தால், 25,000 அமெரிக்​கர்​கள் இறந்​திருப்​பர். கடத்​தலில் தொடர்​புடைய​தாக சந்​தேகிக்​கப்​படும் இரு​வரும் வழக்கு விசா​ரணைக்​காக அவர்​களின் சொந்த நாடான ஈக்​கு​வ​டார் மற்​றும் கொலம்​பி​யா​வுக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டனர். இவ்​வாறு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். போதைப் பொருள் ஏற்றி வந்த நீர்​மூழ்கி கப்​பல் எந்த நாட்​டில் இருந்து புறப்​பட்​டது என்​பதை அமெரிக்கா தெரிவிக்​க​வில்​லை.

இந்த நீர்​மூழ்கி கப்​பல் ரகசிய கப்​பல் கட்​டும் தளத்​தில் உரு​வாக்​கப்​பட்டு கொலம்​பி​யா​விலிருந்து மத்​திய அமெரிக்கா அல்​லது மெக்​சிகோவுக்கு போதைப் பொருள் கடத்​தலுக்கு நீண்​ட​கால​மாக பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம்​ என கூறப்​படு​கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.