டெல்லிக்கு இந்திரபிரஸ்தா பெயர் வைக்க கோரிக்கை

புதுடெல்லி: டெல்லி கலாச்​சா​ரத்​துறை அமைச்​சர் கபில் மிஸ்​ரா​வுக்​கு, விஸ்வ இந்து பரிஷத் டெல்லி செய​லா​ளர் சுரேந்​திர குமார் குப்தா எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

மகா​பாரதத்​தில் டெல்லி இந்​திரபிரஸ்தா என அழைக்​கப்​பட்​டுள்​ளது. எனவே பழங்​கால வரலாறு மற்​றும் கலாச்​சா​ரத்​துடன் தொடர்பு படுத்​தும் வகை​யில் தலைநகர் டெல்லி பெயரை இந்​திரபிரஸ்தா என மாற்ற வேண்​டும். அதே​போல் இந்​தி​ரா​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம், டெல்லி ரயில் நிலை​யம், ஷான​கான்​பாத் வளர்ச்சி வாரி​யம் ஆகிய​வற்​றுக்​கும் இந்​திரபிரஸ்தா என்ற பெயரை வைக்க வேண்​டும். பெயர்​கள் வெறும் மாற்​றங்​கள் மட்​டும் அல்ல. அவை நாட்​டின் உணர்வை வெளிப்​படுத்​துகின்​றன.

இந்​திரபிரஸ்தா என கூறி​னால், அதை 5,000 ஆண்டு கால வரலாற்​றுடன் நாம் தொடர்புபடுத்த முடி​யும். முஸ்​லிம் ஊடுரு​வல்​காரர்​களின் நினை​விடங்​கள் அரு​கில் பாண்​ட​வர் காலத்து நாயகர்​கள், முனிவர்​களின் நினை​விடங்​களை அமைக்க வேண்​டும். டெல்​லி​யில் மன்​னர் ஹேம சந்​திரா விக்​கிர​மா​தித்​யா​வுக்கு நினை​விடம் அமைக்க வேண்​டும். இவ்​வாறு குப்​தா கூறியுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.