பிஹாரில் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்யாத பாஜக அதிருப்தி தலைவர்

பாட்னா: பிஹாரின் பாகல்​பூரை சேர்ந்த பாஜக மூத்த தலை​வர் அஸ்​வினி குமார் சவுபே. முன்​னாள் மத்​திய அமைச்​ச​ரான இவர் பாகல்​பூரில் செல்​வாக்​குமிக்க தலை​வ​ராக விளங்​கு​கிறார். இவரது மகன் அர்​ஜித் சரஸ்​வத் சவுபே (43). பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அர்​ஜித்​துக்கு சீட் கிடைக்​கும் என்று பெரிதும் எதிர்​பார்க்​கப்​பட்​டது.

ஆனால், பாகல்​பூர் சட்​டப்​பேர​வைத் தொகுதி பாஜக வேட்​பாள​ராக ரோஹித் பாண்டே என்​பவர் அறிவிக்​கப்​பட்​டார். இதற்கு அர்​ஜித் கடும் எதிர்ப்பை பதிவு செய்​தார். பாஜக வேட்​பாள​ருக்கு எதி​ராக சுயேச்​சை​யாக பாகல்​பூர் தொகு​தி​யில் போட்​டி​யிடு​வேன் என்று அறி​வித்​தார்.

இதன்​படி பாகல்​பூர் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் உள்ள தேர்​தல் அலு​வல​கத்​துக்கு அர்​ஜித் நேற்று முன்​தினம் ஆதர​வாளர்​கள் புடைசூழ சென்​றார். வேட்பு மனுவை தாக்​கல் செய்​வது தொடர்​பாக நிருபர்​களுக்கு பேட்டி அளித்​தார்.

அப்​போது முன்​னாள் மத்​திய அமைச்​சர் அஸ்​வினி குமார் சவுபே தனது மகன் அர்​ஜித்தை மொபைல்​போனில் தொடர்பு கொண்டு பேசி​னார். நிருபர்​கள் முன்​னிலை​யில் தனது தந்​தை​யுடன் அர்​ஜித் பேசி​னார். இதன்​பிறகு அவர் வேட்​புமனுவை தாக்​கல் செய்​யாமல் வீட்​டுக்கு திரும்​பி​னார்.

இதுதொடர்​பாக நிருபர்​களிடம் அர்​ஜித் கூறிய​தாவது: எனது தந்தை மொபைல்​போனில் தொடர்பு கொண்டு கண்​டிப்​பான அறி​வுரைகளை கூறி​னார். பாஜக தலை​மை​யின் உத்​தரவை மீறக்​கூ​டாது. கடைசிவரை பாஜக​வில் மட்​டுமே இருக்க வேண்​டும் என்று எனது தந்தை கூறி​னார். எனது தந்​தை​யின் சொல்​லுக்கு கட்​டுப்​பட்டு வேட்​புமனுவை தாக்​கல் செய்​ய​வில்​லை. கட்​சிக்கு எதி​ராக செயல்பட மாட்​டேன். வரும் தேர்​தலில் பாகல்​பூர் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் வெற்றி பெற உழைப்​பேன். இவ்​வாறு அர்​ஜித் தெரி​வித்​தார்.

ஏஐஎம்​ஐஎம்: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் ஏஐஎம்​ஐஎம் கட்சி சார்​பில் 100 தொகு​தி​களில் வேட்​பாளர்​களை நிறுத்த முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. இந்த சூழலில் அந்த கட்​சி​யின் சார்​பில் 25 வேட்​பாளர்​கள் அடங்​கிய பட்​டியல் நேற்று வெளி​யிடப்​பட்​டது. ஆசாத் சமாஜ் கட்​சி, அப்னி ஜனதா கட்சி ஆகிய​வற்​றுடன் கூட்​ட​ணி அமைத்​து ஏஐஎம்​ஐஎம்​ போட்​டியிடுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.