சென்னை: தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து அடையாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், 24 அடி உயரமுள்ள ஏரியில், தற்போத 21 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி, ஏரியில், இன்று மாலை 4 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. […]
