Sarfaraz Khan: இந்தியாவில் கிரிக்கெட், சினிமா, மதம், அரசியல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்திருக்கிறது எனலாம். இதில் எதாவது ஒன்றில் சிக்கல்கள் வந்தாலும் அதன் தாக்கம் பிற விஷயங்களிலும் எதிரொலிக்கும்.
Add Zee News as a Preferred Source
Sarfaraz Khan: சர்பராஸ் கானை சேர்க்காதது ஏன்?
அந்த வகையில், சர்பராஸ் கானை இந்திய அணியில் எடுக்காதது தற்போது அரசியல் களத்திலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்திய ஆடவர் சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர், மதத்தை காரணமாக வைத்து வீரர்களுக்கு அநீதி இழைப்பதாக குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் பெண் தலைவர் ஷாமா முகமது, ஏன் இந்திய அணியில் சர்பராஸ் கானை சேர்க்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு எதிரான இரண்டு அதிகாரப்பூர்வமறற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியா ஏ ஸ்குவாட் நேற்று அறிவிக்கப்பட்டது. ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், சாய் சுதர்சன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Sarfaraz Khan: தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை
இங்கிலாந்து டெஸ்ட் தொடர், மேற்கு இந்திய டெஸ்ட் தொடர் உள்ளிட்ட முக்கிய டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து மிடில் ஆர்டர் பேட்டரான சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், தற்போது இந்தியா ஏ அணியில் கூட இடம் கிடைக்காதது பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்களை குவித்த அவருக்கு தகுந்த வாய்ப்புகள் இந்திய அணியில் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Shama Mohamed: ஷாமா முகமதின் X பதிவு
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஷாமா முகமது அவரது X பக்கத்தில், “சர்பராஸ் கான் அவரது குடும்ப பெயரின் காரணமாக தேர்வு செய்யப்படவில்லையா? சும்மா கேட்கிறேன். கௌதம் கம்பீர் இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டில் இருப்பார் என்பது நமக்கு தெரிந்ததுதான்” என பதிவிட்டிருந்தார். கௌதம் கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வருவதற்கு முன் பாஜகவின் எம்.பி.,யாக இருந்து வந்தார், சர்பராஸ் கான் இஸ்லாமியர் என்பதாலேயே பாஜக பின்புலம் கொண்ட கம்பீர் அவரை அணியில் எடுக்கவில்லை என மறைமுகமாக குற்றஞ்சாட்டினார்.
Is Sarfaraz Khan not selected because of his surname ! #justasking . We know where Gautam Gambhir stands on that matter
— Dr. Shama Mohamed (@drshamamohd) October 22, 2025
ரோஹித் குறித்து ஷாமா முகமது
Shama Mohamed: சர்பராஸ் கானின் பிட்னஸ் மீது பல்வேறு கேள்விகள் இருந்த நிலையில், அவர் உடல் எடையை குறைத்து களத்திற்கு திரும்பினார். அதன் பின்னரும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 6 டெஸ்டில் 371 ரன்களை எடுத்துள்ளார். மூன்று அரைசதம், ஒரு சதம் என சிறப்பாக விளையாடினாலும் அவர் இந்தியாவுக்கு வெளியே ஒரு டெஸ்டில் கூட விளையாடியதில்லை. ஷாமா முகமது இதற்கு முன், ரோஹித் சர்மாவை பிட்னஸ் இல்லாதவர் என்றும் விளையாட்டு வீரர்கள் இடையே குண்டாக இருப்பவர் என்றும் விமர்சித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மேலும் படிக்க | ‘ரோஹித் சர்மா மிகவும் குண்டாக இருக்கிறார்’ காங்கிரஸ் நிர்வாகி பதிவால் சர்ச்சை – என்ன மேட்டர்?
மேலும் படிக்க | ரிஷப் பண்ட் கேப்டன்… இந்த தமிழக வீரருக்கு துணை கேப்டன் பொறுப்பு – எந்த தொடரில்?
மேலும் படிக்க | இராணுவ மரியாதை பெற்ற இந்திய விளையாட்டு வீரர்கள்.. லிஸ்ட்டில் யாரெல்லாம்?
About the Author
Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More