சென்னை: பருவமழை காரணமாக, துணைமுதல்வர் உதயநிதியின் தொகுதியான திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டு தற்காலிக நிவாரண மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதிநேரடி ஆய்வு நடத்தினார். அதைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் திடீராய்வு மேற்கொண்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,துணை முதலமைச்சர் இன்று அதிகாலையில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் தெருவில் செயல்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள மைய […]
