ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பினர் பொது இடங்​களில் பயிற்சி மேற்​கொள்ள தடை விதிக்க வேண்​டும், அதன் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கும் அரசு ஊழியர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு மாநில அமைச்​சர் பிரி​யங்க் கார்கே கடந்த வாரம் கடிதம் எழு​தி​னார்.

இந்​நிலை​யில் கர்​நாட​கா​வின் ரெய்ச்​சூர் மாவட்​டம், லிங்​சாகூரில் கடந்த 12-ம் தேதி நடந்த ஆர்​எஸ்​எஸ் நிகழ்​வில் பங்​கேற்ற சிர்​வார் வட்​டார மேம்​பாட்டு அதி​காரி பிர​வீன் குமார் நேற்று பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார்.

பசவ கல்​யாண் தாலு​கா​வில் அரசு மாணவர் விடுதி சமையல​ராகப் பணி​யாற்​றிய பிரமோத் ஆர்​எஸ்​எஸ் நிகழ்​வில் பங்​கேற்​று, அதன் புகைப்​படங்​களை தனது சமூக வலைதள பக்​கங்​களில் பகிர்ந்​துள்​ளார். இதையடுத்து அவரை வட்​டாட்​சி​யர் மஞ்​சு​நாத் பணி​யிடை நீக்​கம் செய்து உத்​தர​விட்​டுள்​ளார்.

ஆர்​எஸ்​எஸ் நிகழ்ச்​சிகளில் பங்​கேற்று சமூக வலை​தளங்​களில் புகைப்​படங்​களை பகிர்ந்​துள்ள அரசு ஊழியர்​களின் விவரத்தை திரட்​டும் பணி​யில் அதி​காரி​கள் ஈடு​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்த நடவடிக்​கைக்கு பாஜக, ஆர்​எஸ்​எஸ், பஜ்ரங் தளம் உள்​ளிட்ட அமைப்​பினர் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.