இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலியா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. முதல் போட்டி 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. தொடக்க முதலே தடுமாற்றத்தை சந்தித்த இந்திய அணி 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒற்றை இலக்கு ரன்னில் ஆட்டமிழந்தனர். அதேசமயம், தோல்விக்கு முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ்வை அணியில் எடுக்காததே காரணம் என விமர்சிக்கப்பட்டது.
Add Zee News as a Preferred Source
இந்த சூழலில், இரண்டாவது ஒருநாள் போட்டியிலாவது குல்தீப் யாத்வை பிளேயிங் 11ல் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவும் அணிக்குள் கொண்டுவரப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று (அக்டோபர் 23) நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருவருமே அணிக்குள் கொண்டுவரப்படவில்லை. இந்திய அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களையே இப்போட்டியிலும் களமிறக்கி உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்திய அணியில் குல்தீப் யாதவ்-வை எடுக்காததன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் குல்தீப் யாதவ்வை தவிர்த்து, ராணா போன்ற ஒரு பயண வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய எடுத்த முடிவின் முட்டாள்தனத்தை சேவியர் பார்ட்லெட் வெறும் நான்கு பந்துகளில் காட்டினார் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், எனவே, இந்திய தேர்வாளர்கள் தங்கள் அணியில் மிகவும் சக்திவாய்ந்த போட்டி வெற்றியாளரான குல்தீப் யாதவ்-ஐ விட்டுவிட்டு, ராணா போன்ற ஒரு பயண வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ததன் முட்டாள்தனத்தை சேவியர் பார்ட்லெட் வெறும் நான்கு பந்துகளில் காட்டினார். இங்கிலாந்தில் குல்தீப்பைத் தவிர்த்துவிட்டது தவறு & அடிலெய்டில் அவரைத் தேர்வு செய்யாதது அபத்தமானது என குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், கேப்டன் சுப்மன் கில் மற்றும் விராட் கோலியை ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் சேவியர் பார்ட்லெட்ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார். இதன் பிறகே சசி தரூர் இந்த பதிவை பதிவிட்டார்.
About the Author
R Balaji