இந்திய-ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இழுபறி; பியூஷ் கோயல் பயணம் வெற்றியைத் தருமா?

இந்திய மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது… பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும், இன்னும் அதில் இழுபறி நீடித்து வருகிறது.

என்ன பேச்சுவார்த்தை?

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இது ஒப்பந்தமானால், இருதரப்பும் ஏற்றுமதி, இறக்குமதிகள் செய்வதில் பெரிய வரிச்சலுகைகள் கிடைக்கும். மேலும், இருதரப்பிற்குமே வர்த்தக ரீதியிலான உறவு நன்கு அமையும்.

ஆனால், பதினான்காவது கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும் இருதரப்பினருக்கும் இடையே சில வித்தியாசங்கள் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸில் நடந்தது.

வர்த்தகம்
வர்த்தகம்

என்ன பிரச்னை?

இருதரப்பும் தங்களுக்கு தேவையான வரி சலுகைகள், சந்தை அனுமதி, வர்த்தகம் மற்றும் முதலீடு அனுகூலங்களைப் பேசி வருகிறது. இதில் தான் சிக்கல் எழுந்துள்ளது.

ஆட்டோமொபைல், விவசாயம், வைன் போன்றவற்றிற்கு இந்திய சந்தை அனுமதியை நாடுகிறது ஐரோப்பிய ஒன்றியம். ஆனால், இவை இந்தியா பெரும்பாலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துறைகள் ஆகும். இவைகளுக்கு தனி கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

அடுத்ததாக, முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை வரையறைகள். இந்த இரண்டிலும் ஒரு முடிவை எட்ட முடியாத சூழல் நீடித்து வருகிறது.

ப்ளஸ்

இன்னொரு பக்கம், இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைத் தொகுக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இது இந்தப் பேச்சுவார்த்தையின் மிகப்பெரிய ப்ளஸ் ஆகும்.

இந்தியா

இந்தியாவைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியம் கேட்கும் சந்தை அனுமதியைக் கொடுத்தால், அது இந்தியாவிற்குள்ள உற்பத்தியைப் பாதிக்கும்.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் தங்களுக்கு இந்திய சந்தையிலும், இந்தியாவில் செய்யப்படும் தங்களது உற்பத்திகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

இதற்கேற்ற விஷயங்களைத் தான் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்து வைக்கிறது.

ஏன் இது முக்கியம்?

ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. கடந்த 2024–2025 நிதியாண்டில், இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 75.85 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியா கடந்த நிதியாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 60.68 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இறக்குமதிகளைச் செய்துள்ளது. ஆக, இரண்டுக்கும் இடையே, 2024–25 நிதியாண்டில் மொத்தமாக 136.53 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் நடந்துள்ளது.

இந்தத் தரவுகள் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளுக்கே மட்டுமே பொருந்தும்.

பியூஷ் கோயல்

இந்தப் பேச்சுவார்த்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இழுபறி தொடர்ந்து நீடித்து வருவதால் இது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது.

இந்த நிலையில் தான், இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அடுத்த வாரம் பிரஸ்ஸல்ஸுக்கு செல்லவிருக்கிறார். இது பேச்சுவார்த்தையை பாசிட்டிவாக மாற்றும் என்று நம்பப்படுகிறது.

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.