இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த சூழலில், இன்று (அக்டோபர் 23) அடிலெய்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது.
Add Zee News as a Preferred Source
அதே சமயம் 17 அண்டுகள் கழித்து அடிலெய்ட் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணி 2008ஆம் ஆண்டில் அடிலெய்டு மைதானத்தில் கடைசியாக தோல்வியை சந்தித்திருந்தது. அதன் பின்னர் இந்த போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. இது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
இந்திய அணியின் இந்த தோல்வி தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. ஏற்கனவே கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின், இந்திய அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் தொடரை இழந்தது. இதையடுத்து இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வென்றிருந்தாலும், தற்போது ஆஸ்திரேலியா சென்று அங்கு மீண்டும் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.
இத்தொடரில் இருந்து சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக மாறி இருக்கிறார். ரோகித் சர்மாவை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டது. வருங்கால இந்திய அணியை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கூறக்கின்றனர். ஆனால் அவர் பதவி ஏற்ற முதல் தொடரிலேயே சருக்கலை இந்திய அணி சந்தித்துள்ளது. இதனால் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
அதேபோல், குல்தீப் யாதவ் போன்ற முழு நேர பந்து வீச்சாளர்களை பெஞ்சில் அமர வைத்துவிட்டு ஆல் ரவுண்டர்களை அதிகமாக எடுத்துச் செல்வது. ரன்களை வாரி வழங்கும் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற பிடிவாதம், ரவீந்திர ஜடேஜாவை கழட்டிவிட்டது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பும்ராவை தேவையில்லாமல் விளையாட வைத்துவிட்டு இத்தொடரில் ஓய்வு கொடுத்தது போன்ற திட்டங்களே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
About the Author
R Balaji