CSK-வில் இருந்து சாம் கரன் நீக்கமா? இன்ஸ்டாவில் வந்த மாற்றம் என்ன?

Chennai Super Kings, Sam Curran Trading: ஐபிஎல் 2026 சீசன் அடுத்தாண்டு மார்ச் மாதம்தான் தொடங்கும் என்றாலும், மினி ஏலத்தை (IPL 2026 Mini Auction) முன்னிட்டு தற்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டுவிட்டது. வரும் டிசம்பர் மாதத்தில் மினி ஏலம் நடைபெற இருக்கிறது, நவம்பர் 15ஆம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தங்களின் தக்கவைப்பு பட்டியலை இறுதிசெய்வார்கள் என கூறப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

IPL Trading: ஐபிஎல் டிரேடிங்

இதனால், ஐபிஎல் டிரேடிங் (IPL Trading) பேச்சுவார்த்தையும் பரபரப்பான கட்டத்தில் இருக்கிறது. சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேட் செய்ய இருப்பதாகவும், சிஎஸ்கே – டெல்லி – கேகேஆர் அணிகள் அவரை டிரேடில் வாங்க ஆர்வம் காட்டுவதாகவும் பல மாதங்களுக்கு முன் இருந்தே செய்திகள் வந்தன. இதைத் தொடர்ந்தும் பல வீரர்கள் டிரேட் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வந்தன.

CSK Trading: வாஷிங்டன் சுந்தர் டிரேடிங்

சமீபத்தில், சிஎஸ்கே அணி (CSK) ரவிசந்திரன் அஸ்வினுக்கு பதில் மாற்றாக வாஷிங்டன் சுந்தரை டிரேட் செய்வதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணியை அணுகியதாகவும், அதற்கு குஜராத் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இவை எதுவும் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. இந்நிலையில், தற்போது மற்றொரு டிரேட் பேச்சுவார்த்தை குறித்த தகவலும் வெளியாகி உள்ளது.

CSK Trading: சாம் கரன் டிரேடிங்

சிஎஸ்கேவின் வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான சாம் கரன் டிரேடிங் (Sam Curran Trading) அல்லது மினி ஏலத்தில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உள்ள டொனவேன் ஃபிரேராவுக்காக, சிஎஸ்கே அணி சாம் கரனை டிரேட் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. டொனவேன் ஃபிரேரா (Donovan Ferreira) SA20 தொடரில் ஜேஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் நிலையில், சாம் கரனை விட சிறந்த பேட்டிங் ஆல்-ரவுண்டர் என்பதால் அவரை எடுக்க சிஎஸ்கே திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டது.  டொனவேன் ஃபிரேரா பந்துவீச்சு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்றாலும் அவர் பினிஷிங்கில் சிறப்பாக செயல்படுவார்.

pic.twitter.com/3BBdNlwZvz

— Its_M (@maxeyyy_tweets) October 23, 2025

CSK Trading: சாம் கரன் இன்ஸ்டா பயோவில் மாற்றம்

இதையொட்டி, இன்ஸ்டாகிராம் பயோவில் சிஎஸ்கேவை குறிப்பிட்டிருந்த சாம் கரன், தற்போது அதை நீக்கியிருப்பதாக X தளத்தில் பலரும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலம், சாம் கரன் டிரேட் செய்யப்படுவதோ, மினி ஏலத்தில் விடுவிக்கப்படுவதோ உறுதியாகிறது என பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இன்னும் ஒரு சிலர் இது முற்றிலும் தவறு என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

 Sam Curran had both Surrey & CSK tagged in his Insta bio earlier.

And today he removed both.

Mostly it’s some marketing gimmick or sponsorship sort of thing.
So chill guys, Sam is going nowhere. https://t.co/ABIzmxWvTr pic.twitter.com/T7KGGbX685

— Pratyush Halder (@pratyush_no7) October 23, 2025

CSK Trading: சாம் கரன் போக மாட்டார்

அதாவது, சாம் கரன் Surrey அணி, சிஎஸ்கே அணி இரண்டையும் டேக் செய்து வைத்திருந்தாகவும், தற்போது இரண்டையுமே நீக்கியிருப்பதாகவும் கூறுகிறார்கள். மேலும் இது வெறும் விளம்பரத்திற்காக கூட இருக்கலாம் என்றும்  பலரும் சந்தேகிக்கின்றனர். எனவே, சாம் கரன் சிஎஸ்கேவில் இருந்து போய்விட மாட்டார் என பதிவிட்டு வருகின்றனர். மேலும், ஒரு பதிவர், “சிஎஸ்கே 1000 தவறுகள் செய்யலாம், ஆனால் இதை செய்ய முடியாது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி டொனோவனுக்கு ஈடாக கரனை கேட்டால் CSK இதுகுறித்து யோசிக்கலாம். ஆனால் டெல்லி டொனோவனை விடுவிக்க சாத்தியமே இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

CSK can make 1000 mistakes, but not this.

If DC asks for Curran in exchange for Donovan then CSK may even think, but it’s very unlikely that DC will let go Donovan. pic.twitter.com/FyVhaMPHN4

— Pratyush Halder (@pratyush_no7) October 23, 2025

CSK Trading: சாம் கரன் vs டொனவேன் ஃபிரேரா

டொனோவனை டெல்லி வெறும் ரூ.75 லட்சத்திற்கே ஏலத்தில் எடுத்தது, ஆனால் சிஎஸ்கேவோ சாம் கரனை ரூ.2.40 கோடிக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து வீரரான சாம் கரன் 64 போட்டிகளில் 997 ரன்களையும், 59 விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளார். டொனவேன் ஃபிரேரா 3 போட்டிகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார், ஒரு ஓவர் கூட வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கட்டம் கட்டிய மும்பை இந்தியன்ஸ்! இந்த 5 வீரர்களுக்கு இனி இடம் இல்லை!

மேலும் படிக்க | IPL 2026 மினி ஏலம்! எப்போது எங்கே நடக்கிறது? வெளியான முக்கிய தகவல்!

மேலும் படிக்க | இந்த ஒரே ஒரு வீரரை குறிவைக்கும் 3 அணிகள்… டிரேட் ஆவாரா? ஏலத்தில் போவாரா?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.