இந்திய அணியில் வெளியேறப்போது யாரு? குல்தீப் யாதவ் வருவது உறுதி!

India vs Australia 3rd ODI Playing XI Prediction: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாட உள்ளது.

Add Zee News as a Preferred Source

India vs Australia: தொடரை இழந்த இந்தியா 

தற்போது முதலிரண்டு ஓடிஐ போட்டிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஓடிஐ தொடரை இழந்துள்ளது. கௌதம் கம்பீர் 2024இல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் இரண்டாவது முறையாக இருத்தரப்பு தொடர்களில் இந்தியா மண்ணைக் கவ்வி உள்ளது. 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா இவர் தலைமையில் வென்றாலும் கூட, இந்திய அணியின் தற்போதைய தோல்விக்கு அவரின் சில முடிவுகளும் காரணம் எனலாம். பிளேயிங் லெவன் காம்பினேஷனில் ஆல்-ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தொடங்கி, குல்தீப் யாதவ் போன்ற பிரீமியம் வீரரை வெளியே அமரவைப்பது என பல விஷயங்களை சொல்லலாம்.

India vs Australia: பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம்

இது ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை (அக். 25) நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இப்போட்டி தொடங்கும். வைட்வாஷை தவிர்க்க இந்திய அணி வெற்றிக்கு கடுமையாக போராடும், கடந்த 2024இல் இலங்கையில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஓடிஐ தொடரிலும் இந்தியா வைட்வாஷ் ஆனது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று, வைட்வாஷை தவிர்க்க இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் சில மாற்றங்களை செய்தாக வேண்டும். 

India vs Australia: சிட்னி ஆடுகளம் எப்படி இருக்கும்?

சிட்னி மைதானம் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களை கொண்டவை. இருப்பினும் தற்போது ஆஸ்திரேலியாவில் கோடை காலத்திற்கு முந்தைய பருவம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக ஆடுகளங்கள் செயலாற்றுகின்றன. முதலில் இந்தியா பேட்டிங் செய்தால் நிச்சயம் 280 – 300 ரன்களை அடிக்க வேண்டும், முதலில் பந்துவீசினால் ஆஸ்திரேலியாவை 250 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கவும், ஸ்விங் செய்யவும் கடுமையாக போராட வேண்டும்.

India vs Australia: குல்தீப் யாதவ் விளையாட வேண்டும்

ஆட்டம் போக போக ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. எனவே, பலமான சுழற்பந்துவீச்சு படையை கொண்டிருக்கும் அணிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். இந்த இடத்தில்தான் ஆஸ்திரேலியாவை இந்தியா பின்னுக்குத் தள்ள வேண்டும். நேற்றைய போட்டியில் மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளரான ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா விளையாடியதை போல், இந்திய அணியின் குல்தீப் யாதவும் விளையாட வேண்டும். மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் அனுபவமில்லாத வீரர்களை ஆட்டமிழக்க வைக்க, குல்தீப் யாதவ்தான் சரியான ஆளாக இருப்பார்.

India vs Australia: நிதிஷ் ரெட்டி vs ஹர்ஷித் ராணா

குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்றால் யாரை நீக்க வேண்டும் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். குல்தீப் யாதவ் வருவதற்கு ஒரு பேட்டரைதான் நீங்கள் பலி கொடுக்க வேண்டும். நிதிஷ்குமார் ரெட்டி உங்களுக்கு பெரியளவில் பந்துவீசுவதில்லை. நம்பர் 8இல் பேட்டிங் செய்கிறார். அதேநேரத்தில் ஹர்ஷித் ராணா ஓரளவு சுமாராக பந்தும் வீசுகிறார், பேட்டிங்கும் செய்கிறார். எனவே, நம்பர் 8இல் ஹர்ஷித் ராணாவை பேட்டிங் செய்ய வைத்து, குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம். நிதிஷ் ராணாவுக்கு ஓய்வளிக்க வேண்டும். அவர் டி20ஐ தொடரில் முழுமையாக விளையாட வேண்டும். இதுவே வைட்வாஷை தவிர்த்து, இந்தியா ஆறுதல் வெற்றி பெற சிறந்த ஆப்ஷனாக இருக்கும். 

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.