iPhone 16 Pro Price Cut: தீபாவளி பண்டிகை காலம் சிறப்பு விற்பனை முடிவடைந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மாடல் போனின் விலை கணிசமாக தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆப்பிள் போன் ஆர்வலர்களுக்கு மிகுந்த உற்சாகத்தில் உள்ளானர். முன்னதாக ரூ.1,19,900 விலையில் கிடைத்த இந்த போனின் விலை, தற்போது பிக் பாஸ்கெட் தளத்தின் சலுகையைத் தொடர்ந்து ரூ.99,990க்கு கிடைக்கிறது. அதன் முழு விவரங்களை பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source
பிக் பாஸ்கெட் ஆன்லைன் நிறுவனம்:
பிக் பாஸ்கெட் (Big Basket) தளம் என்பது மளிகை பொருட்கள் விநியோகத்திற்கு பெயர் பெற்றது. ஆனால் ஐபோன் மாடலுக்கு சலுகையை வழங்கியதன் மூலம் ஆன்லைன் ஷாப்பிங் வணிகமாக மாற்றியுள்ளது.கடந்த ஆண்டு மிகவும் விரும்பப்பட்ட பிரீமியம் ஃபிளாக்ஷிப்களில் ஒன்றான ஐபோன் 16 ப்ரோ மாடலின் மிகப்பெரிய விலைக் குறைப்பை பிக் பாஸ்கெட் அறிவித்துள்ளது. இதன்மூலம் பிக் பாஸ்கெட் இனி பால் மற்றும் காய்கறிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இந்த தளம் தற்போது உயர்நிலை கேஜெட்களை டெலிவரி செய்வதில் களம் இறங்கியுள்ளது. அதற்கு ஐபோன் 16 ப்ரோ முக்கிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பிக் பாஸ்கெட் தளம் வர்த்தகத் துறைக்கு ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பிக் பாஸ்கெட்டின் புதிய உத்தி:
விரைவாக டெலிவரி சேவை ஐபோன் (iPhone) போன்ற பிரீமியம் ஸ்மார்ட்போனை விற்பனை செய்யத் தொடங்குவது இதுவே முதல் முறை. பிக் பாஸ்கெட் தளம் தனது மளிகை பயன்பாட்டைத் தாண்டி ஒரு தொழில்நுட்ப ஷாப்பிங் தளத்திற்கு விரிவுபடுத்த விரும்புகிறது என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது. இந்த நிறுவனம் எதிர்காலத்தில் மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் போன்ற வகைகளையும் டெலிவரி செய்யலாம்.
20 நிமிடங்களில் ஐபோன் டெலிவரி:
ஐபோன் 16 ப்ரோ விலை குறைப்பை அறிவித்ததோடு மட்டுமில்லாமல், சில இடங்களில் ஐபோன்கள் 20 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என்று பிக் பாஸ்கெட் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது முன்பு காய்கறிகள் அல்லது ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தால், 20 நிமிடங்களில் டெலிவரி செய்யப்பட்டதை போல, தற்போது ஐபோன் அதே காலக்கெடுவிற்குள் உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து சேரும்.
ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலை எவ்வளவு குறைக்கபட்டது?
ஐபோன் 16 ப்ரோ மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் விலை ₹1,19,900க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிக் பாஸ்கெட் தளத்தில் ஐபோன் 16 ப்ரோ ₹99,990க்கு கிடைக்கிறது. அதாவது ₹19,910 நேரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கூடுதலாக,
ஐபோன் 16 ப்ரோ விலையில் கூடுதல் சலுகை எவ்வாறு பெறுவது?
பிக் பாஸ்கெட் தளத்தில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. இதன் காரணமாக ஐபோன் 16 ப்ரோ மாடலின் விலையை மேலும் குறைக்கக்கூடும்.உங்களிடம் பழைய ஸ்மார்ட்போன் இருந்தால், விலையை மேலும் குறைக்க எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐபோன் 16 ப்ரோ மாடலின் அம்சங்கள்:
டிஸ்ப்ளே: 15.93 செ.மீ (6.3-அங்குலம்) சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்ப்ளே.
சிப்: A18 ப்ரோ சிப், 6-கோர் செயலி.
பின்புற கேமரா: 48MP, 48MP, 12MP.
முன்புற கேமரா: 12MP.
சேமிப்பகம்: 128ஜிபி, 256ஜிபி, 512ஜிபி, 1TB.
வடிவமைப்பு: உறுதியான மற்றும் லேசான டைட்டானியம் வடிவமைப்பு.
பேட்டரி: 3582 mAh பேட்டரி.
ரேம் (RAM): 8 GB RAM
வாடிக்கையாளர்களுக்கு என்ன நன்மைகள்?
விரைவான டெலிவரி: ஒரே நாளில் அல்லது 20 நிமிட டெலிவரி உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் வங்கி தள்ளுபடி: தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளில் 10% வரை கேஷ்பேக்.
எக்ஸ்சேஞ்ச் சலுகை: பழைய சாதனங்களில் கூடுதல் மதிப்பில் ₹5,000 முதல் ₹7,000 வரை தள்ளுபடி
கட்டணமில்லா EMI: தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் கிடைக்கும் EMI விருப்பங்கள்
About the Author

Shiva Murugesan
Shiva Murugesan
…Read More