சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு 3 வேளை உணவளிக்க ரூ.186 கோடியை ஒதுக்​கீடு செய்​து, தமிழக அரசு உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில், தூய்மைப் பணியை தனி​யார் மயமாக்​கு​வதை கண்​டித்​து, தூய்மைப் பணி​யாளர்​கள் ரிப்​பன் மாளிகை முன்பு கடந்த ஆகஸ்ட் மாதம் கால​வரையற்ற போராட்​டம் நடத்தி வந்​தனர்.

இதை முடிவுக்கு கொண்டு வரு​வது தொடர்​பாக, ஆக.14-ம் தேதி முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமைச்​சரவை கூட்​டம் நடை​பெற்​றது. இதில், தூய்மைப் பணி​யாளர்​களுக்கு காலை உணவு வழங்​கு​வது உள்​ளிட்ட 7 அறி​விப்​பு​களை முதல்​வர் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்​து, தனி​யார் நிறு​வனம் மூல​மாக தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு உணவு அளிப்​பது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம் செயற்​குறிப்பு ஒன்றை தயாரித்து, நிதி ஒதுக்​கக்​கோரி தமிழக அரசுக்கு அனுப்பி இருந்​தது. அதில், “சென்னை மாநக​ராட்​சி​யில் பல்​வேறு பிரிவு​களில் நிரந்​தர​மாக​வும், தனி​யார் மூல​மும் 29,455 தூய்மைப் பணி​யாளர்​கள் பணிபுரி​கின்​றனர்.

அவர்​களுக்கு 512 இடங்​களில் 3 வேளை உணவு விநி​யோகிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்தை 3 ஆண்​டு​களுக்கு செயல்​படுத்த ரூ.186 கோடி செல​வாகும். அந்த தொகையை 6-வது மாநில நிதி ஆணைய மானி​யத்​திலிருந்து வழங்க வேண்​டும்” என கோரப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், மாநக​ராட்​சி​யின் செயற்​குறிப்பை கவன​முடன் பரிசீலித்த அரசு, தூய்​மைப்பணி​யாளர்​களுக்கு 3 ஆண்​டு​களுக்கு 3 வேளை உணவு வழங்க ரூ.186 கோடி வழங்க அண்​மை​யில் நிர்​வாக அனு​மதி அளித்​துள்​ளது. மேலும், அனைத்து உணவு​களும் உணவு பாது​காப்பு தரக்​கட்​டுப்​பாடு நிறு​வனம் சான்​றளித்த சமையல் அறை​யில் மட்​டுமே தயாரிக்​க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைளையும் அரசு விதித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.