திருச்சி: திருச்சி அருகே பட்டா மாற்ற லஞ்சம் ரூ.2 லட்சம் வாங்கிய வருவாய் துறை ஊழியர் கையும் களவுமாக சிக்கினார். விசாரணையில், அவர் வட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் உறவினருக்குச் சொந்தமான சுமார் 11,000 சதுர அடி நிலம், திருச்சி கே. சாத்தனூர் பகுதியில் உள்ளது. அந்த இடம் தொடர்பான பட்டா ஆவணங்களில், அது மாநகராட்சிக்குச் சொந்தமான இடம் எனத் […]