ஹூண்டாய் இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக விளங்கும் பிரசத்தி பெற்ற வெனியூ இரண்டாம் தலைமுறை காரின் டிசைனில் முக்கிய மாற்றங்கள், கூடுதல் வசதிகள் பெற்றுள்ள நிலையில் என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றங்களும் இல்லை.
வரும் 4, 2025 விலை அறிவிக்கப்பட உள்ள இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு இன்றுமுதல் துவங்கப்பட்டுள்ள நிலையில், கட்டணமாக ரூ.25,000 வசூலிக்கப்படுகின்றது.
2026 New Hyundai Venue SUV
இன்டீரியரில் பல நவீன அம்சங்களை பெற்றிருப்பதை கடந்து மிக முக்கியமான ஒன்று சிறப்பான இடவசதி மற்றும் பூட்ஸ்பேஸ் வழங்கும் நோக்கில் 20மிமீ கூடுதல் வீல்பேஸ் பெற்றுள்ளது. இதனால் 2026 வெனியூ பின்புற பயணிகளுக்கு கால்களை மிக தாராளமாக வைப்பதற்கு இடவசதியை அதிகரிக்கிறது. வீல்பேஸ் 2520 மிமீ பெற்றுள்ள நிலையில் உயரம் 48 மிமீ அதிகரிக்கப்பட்டு 1665மிமீ, அகலம் 30 மிமீ அதிகரித்து 1800 மிமீ ஆகவும், நீளத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் 3995 மிமீ தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மிக சிறப்பான வசதிகளை கொண்ட இந்த காரில் D-Cut ஸ்டீயரிங் வீல் பெற்று பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற்று டூயல் 62.5 செ.மீ அகலம் அதாவது வளைந்த வடிவத்தை பெற்ற இரட்டை 12.3 அங்குல டிஸ்பிளே கிளஸ்ட்டருடன் இணைந்த இண்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்றுள்ளது.


ஆம்பியன்ட் வெளிச்சத்துடன் கூடிய காபி டேபிள் சென்டர் கன்சோல், கிராஷ் பேடில் மூன் வெள்ளை நிறத்தை பெற்று டெர்ராஸோ-டெக்ஸ்ச்சர்டு கிராஷ் பேட் ஃபினிஷ், பிரீமியம் லெதர் ஆர்ம்ரெஸ்ட் உள்ளது.
வெளிப்புறத்தில் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் நோக்கில் அமைந்த அடர் கருமை நிற கிரிலுடன் குரோம் பூச்சூ பெற்று புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு இரட்டை ஹார்ன் LED DRLகள், குவாட் பீம் LED ஹெட்லேம்ப் உள்ளது.
சைட் கிளாடிங் பேனல், டோர் சில் பெற்ற இந்த புதிய வெனியூ காரில் கருப்பு நிற சி-தூண் வெள்ளி அலங்காரத்தைப் பெற்று அதில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, மேலும் 16 அங்குல அலாய் வீல்களுக்கு ஒரு புதிய வடிவமைப்பு உள்ளது.
பின்புறத்தில் LED லைட் பார் கொண்டு நடுவில் ‘Venue’ எழுத்துக்களைக் கொண்டு, பின்புற பம்பரில் டூயல் டோனை பெற்று கிளாடிங் கொண்டுள்ளது. இருபுறமும் L- வடிவ விளக்குகள் உள்ளன.
புதிய Venue என்ஜின் ஆப்ஷன்
வெனியூ காரில் தொடர்ந்து 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று ஆப்ஷன்களை கொண்டிருப்பதுடன் மேனுவல், ஏஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் பெற்றிருக்கும்.


புதிய வெனியூ நிறங்கள் மற்றும் வேரியண்ட் விபரம்
இரண்டாம் தலைமுறை வெனியூ எஸ்யூவி மாடலுக்கான வேரியண்டில் “Hyundai
eXperience” என்பதனை மையமாக கொண்டு “HX” என வேரியண்ட் வரிசை உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வரிசையில் HX 2 , HX 4, HX 5, HX 6, HX 6T, HX 8, HX 10 ஆகியவற்றுடன் டீசல் வரிசையில் HX 2 , HX 5, HX 7, HX 10 ஆகியவை கிடைக்க உள்ளது.
ஹேசல் நீலம் (புதிய நிறம்), மிஸ்டிக் சபையர் (புதிய நிறம்), அட்லஸ் வெள்ளை, டைட்டன் சாம்பல், டிராகன் சிவப்பு, அபிஸ் கருப்பு மற்றும் டூயல் டோன் கொண்ட அபிஸ் கருப்பு கூரையுடன் கூடிய ஹேசல் நீலம் (புதிய நிறம்) அபிஸ் கருப்பு கூரையுடன் கூடிய அட்லஸ் வெள்ளை உள்ளது.
2026 வெனியூ காரின் விலை ரூ.8 லட்சத்துக்குள் துவங்க வாய்ப்புள்ள நிலையில் ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சங்களை பெற உள்ள நிலையில் இந்த காருக்கு போட்டியாக மாருதி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், XUV 3XO மஹிந்திரா, ஸ்கோடா கைலாக், மற்றும் கியா சொனெட் உள்ளிட்ட பல்வேறு மாடல்கள் உள்ளன.







