அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டு வாரங்களைக் கடந்திருக்கிறது.
மொத்தம் 20 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மூன்று பேர் வெளியேறி இருக்கின்றனர்.
இதில் மூன்றே நாட்களில் தாமாகவே முன்வந்து நந்தினி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற முதல் வார எவிக்ஷனில் பிரவீன் காந்தியும் கடந்த வாரம் அப்சரவாவும் வெளியேறினர்.

இந்த வார ஜூஸ் ஃபேக்டரி டாஸ்க்கால் வீடே கலவரமாகி இருக்கிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான (அக்.24) இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
அதில் விஜே பார்வதியையும், கம்ருதீனையும் பிக் பாஸ் சிறைக்கு அனுப்புகிறார். அவர்கள் இருவரையும் கலையரசன் கிண்டல் செய்ய கம்ருதீன் கோபப்படுகிறார். “இங்க இருக்கிறதை அங்க சொல்றது. அங்க இருக்கிறதை இங்க சொல்றது. கலை ஒரு கேவலமான ஆள். வன்முறையைத் தூண்டுனவங்களை உள்ள வச்சுருக்காங்க. வாய்ல பேசுனவங்களை எல்லாம் வெளிய போடுறாங்க” என்று பார்வதி குமுறுகிறார்.