புதுடெல்லி:
அதானி குழுமத்துக்குப் பயனளிக்கும் வகையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -“இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் ‘மோதானி’ எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மே 2025-ல் இந்திய (நிதித்துறை) அதிகாரிகள், சுமார் ரூ.33,000 கோடி நிதியை, அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ய எல்ஐசிக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து அழுத்தம் கொடுத்ததாக உள் விவகார ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இப்படி பொதுப் பணத்தை நண்பர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்வது நிதியை வீணடிக்கும் செயல் இல்லையா? “ என்று கேள்வி எழுப்பியுள்ளது.