இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதுள்ள ஒருநாள் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரருமான ரோகித் சர்மா, டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் இருந்து ஓய்வு அறிவித்தது நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்வதேச போட்டியான ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் கலந்துகொண்டு விளையாடினார். இவர் இத்தொடரில் எப்படி செயல்பட போகிறார் என்பதில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.
Add Zee News as a Preferred Source
இதையடுத்து இரண்டாவது போட்டியில் கம்பேக் கொடுக்கும் விதமாக 73 ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியில் மூன்றாவது போட்டியில் சதம் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் எப்படி இருந்தது என்பதையும் எவ்வாறு தயாராகினேன் என்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.
கரியரில் கிடைத்ததே இல்லை
இது தொடர்பாக ரோகித் சர்மா பேசுகையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறேன். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தொடருக்கு தயாரானதாக நினைக்கிறேன். ஏனென்றால், இந்த தொடருக்கு தயாராக 5 மாதங்கள் கிடைத்தது. இப்படி ஒரு பெரிய இடைவெளி என் கரியரில் கிடைத்ததே இல்லை. இதன் காரணமாக இந்த நேரத்தை சரியாக பயன்படுத்தி, இத்தொடரில் சிறப்பான பங்களிப்பை கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.
ரசிகர்களுக்கு நன்றி
அதன்படி இத்தொடரை சிறப்பாக முடித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆஸ்திரேலியா மைதானங்களில் நான் பலமுறை விளையாடி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக வந்து விளையாடுவதுபோல் கள சூழலுக்கு ஏற்ப சில மாற்றங்களை செய்தாக வேண்டும். இந்த தொடரில் ரசிகர்கள் எனக்கு மிகப் பெரிய ஆதரவை கொடுத்தனர். அவர்கள் எப்போதும் எந்த நாட்டிலும் இந்திய அணியை விட்டுக்கொடுத்தது கிடையாது. அவர்களின் அன்பிற்கு நன்றி என கூறினார்.
அடுத்த தொடர்கள்
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதை முடித்தவுடன் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் மோத இருக்கின்றது. இதில் ஒருநாள் தொடர்களில் ரோகித் சர்மா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
R Balaji