தெருநாய்கள் வழக்கில் தமிழகம் உள்ளிட்ட மாநில தலைமைச் செயலர்கள் நவ.3-ல் ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ​நாடு முழு​வதும் தெரு​நாய்​களால் ஏற்​படும் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரிக்​கும் வழக்​கில் உரிய காலக்​கெடு​வுக்​குள் பதில்​மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட பிற மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள் வரும் நவ.3-ம் தேதி ஆஜராகி விளக்​கமளிக்க வேண்​டுமென சம்​மன் பிறப்​பித்து உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

தலைநக​ரான டெல்​லி​யில் சிறு​வர்​களை தெரு​நாய்​கள் துரத்​தி, துரத்தி கடித்து ரேபிஸ் தொற்று பரவியது தொடர்​பாக வெளி​யான செய்​தி​யின் அடிப்​படை​யில் நாடு முழு​வதும் உள்ள தெரு​நாய்​கள் பிரச்​சினை தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்​கில் டெல்லி மட்​டுமின்றி நாடு முழு​வதும் உள்ள அனைத்து மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் தெரு​நாய்​களை கட்​டுப்​படுத்த என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது என்​பது குறித்து அந்​தந்த மாநில தலை​மைச் செயலர்​கள் 8 வார காலத்​தில் பதிலளிக்க வேண்​டுமென உச்ச நீதி​மன்​றம் கடந்த ஆக.22-ம் தேதி உத்​தர​விட்டு இருந்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம்​நாத் தலை​மையி​லான அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. பதில் மனுஅப்​போது இந்த விவ​காரம் தொடர்​பாக மேற்கு வங்​கம், ஜார்க்​கண்ட், டெல்லி மாநக​ராட்சி தரப்​பில் மட்​டுமே பதில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது என தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி​கள், பிற மாநில தலை​மைச் செயலர்​கள் இப்​படியொரு வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் நடப்​பது தெரி​யாதா என்​றும் அவர்​கள் நாளேடு​களை​யும், சமூக வலை​தளங்​களை​யும் பார்ப்​பது இல்​லையா என்​றும் கேள்வி எழுப்​பினர். தெரு​நாய்​கள் தின​மும் சிறு​வர், சிறுமியரை கடித்து துவம்​சம் செய்​கின்​றன. அந்த சம்​பவங்​கள் தொடர் செய்​தி​களாக வரும்​போது நமது நாட்​டுக்​கென உள்ள நன்​ம​திப்பு வெளி​நாடு​களில் தவறாக சித்​தரிக்​கப்​படு​கிறது. அதுஒரு​புறமிருக்க தெரு நாய்க்​கடி​யால் பாதிக்​கப்​படு​வோரின் நிலை​மை​யை​யும் சிந்​தித்​துப் பார்க்க வேண்​டும்.

கலையரங்கில் விசாரணைஎனவே இந்த வழக்​கில் உச்ச நீதி​மன்ற நோட்​டீஸ் கிடைக்​கப்​பெறா​விட்​டாலும் உரிய காலக்​கெடு​வுக்​குள் பதில்​மனு தாக்​கல் செய்​யாத தமிழகம் உள்​ளிட்ட பிற மாநிலங்​களின் தலை​மைச் செயலர்​கள் வரும் நவ.3 அன்று ஆஜராகி இதுதொடர்​பாக விளக்​கம் அளிக்க வேண்​டும். அன்​றைய தினம் இந்த வழக்கு வி​சா​ரணை உச்ச நீதி​மன்ற கலை​யரங்​கில் நடத்​தப்​படும். இவ்​வாறு தெரி​வித்​து வி​சா​ரணை​யை நீதிப​தி​கள்​ தள்​ளி​வைத்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.