கோவை: அண்ணா பல்கலைக். சம்பவத்திற்குப் பிறகு ”சார்” என்று சொன்னாலே திமுகவுக்கு பயம் வந்து விடுகிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இன்று காலை கோவை வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வரவேற்பு அளிப்பதற்காகக் கோவை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களிடம் கூறும்போது, “அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்குப் பிறகு, ”சார் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி) என்று சொன்னாலே திமுகவுக்கு பயம் வந்து விடுகிறது. வாக்காளர் கணக்கெடுப்பு நேரு காலத்தில் இருந்தே நடத்தப்பட்டு வருகிறது. பிஹாரில் 65 லட்சம் பேரில் 30 லட்சம் பேர் இடம்பெயர்ந்து விட்டனர். மீதமுள்ளவர்கள் இறந்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்குகள் அதிகமாக உள்ளன. திமுக அமைச்சர்கள் அனைவரும் போலியாகச் சேர்த்த வாக்காளர்கள் குறித்த விவரம் தெரிந்து விடுமோ என அச்சத்தில் உள்ளனர். தவெக தலைவர் விஜய் வழங்கய நிதியுதவியை ஒரு பெண் திருப்பி வழங்குதல் என்பது ஒரு சிலர் உதவியை வாங்க மறுப்பார்கள், சிலர் யாரிடமும் உதவி வாங்காமல் வாழ வேண்டும் என நினைப்பார்கள். அந்த நோக்கத்தில் அந்தப் பெண்மணி பணத்தைத் திருப்பி அனுப்பி இருக்கலாம்” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.