புதுடெல்லி,
காற்று மாசுபாட்டை சமாளிக்க டெல்லியின் மேக விதைப்பு செயல்முறை பணி தற்போது முடிவடைந்து உள்ளது. இந்த செயல்முறை புராரி, மயூர் விஹார், கரோல் பாக் ஆகிய இடங்களில் செய்யப்பட்டது.
இது குறித்த டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியதாவது:-
டெல்லியின் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். செயற்கை மழை பற்றிய பிரச்சினை குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்தோம். மேக விதைப்பு டெல்லியின் மாசு பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன், மேக விதைப்பு சோதனையையும் நடத்தினோம். இது ஒரு பரிசோதனை. இதனால் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.
சோதனை வெற்றியடைந்தால், டெல்லி மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். டெல்லியில் இது முதல் முறையாகும் என்பதால் இது நம் அனைவருக்கும் புதியது. ஆனால் இந்த சோதனை வெற்றி பெறவும், டெல்லி இதனால் பயனடையவும் நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து புறப்பட்டது. டெல்லி அரசின் தலைமையிலான இந்த முயற்சி கான்பூர் ஐ.ஐ.டி.யுடன் இணைந்து செய்யப்பட்டது
இவ்வாறு அவர் கூறினார்.