பிஹாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதி

பாட்னா: பிஹாரில் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும் என மெகா கூட்​டணி தேர்​தல் அறிக்​கை​யில் கூறப்பட்டுள்​ளது. பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் வரும் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் முடிவடைகிறது. இதையொட்டி, 243 உறுப்​பினர்​களைக் கொண்ட சட்​டப்​பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறும் என்றும் 16-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் என்​றும் தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது.

இந்​தத் தேர்​தலில் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி, ராஷ்ட்​ரிய ஜனதா தளம், காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள் அடங்​கிய மெகா கூட்​ட​ணி, பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்சி என மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.

இரண்டு கட்ட தேர்​தலுக்​கான வேட்பு மனு தாக்​கல் முடிவடைந்த நிலை​யில், அரசி​யல் கட்​சிகள் தீவிர தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடுபட்​டுள்​ளன. இந்​நிலை​யில், ராஷ்ட்​ரிய ஜனதா தள மூத்த தலை​வரும் முதல்​வர் வேட்​பாள​ரு​மான தேஜஸ்வி யாதவ், காங்​கிரஸ் மூத்த தலை​வர் பவன் கேரா ஆகியோர் மெகா கூட்​ட​ணி​யின் தேர்​தல் அறிக்​கையை நேற்று வெளி​யிட்​டனர்.

இதுகுறித்து தேஜஸ்வி யாதவ் கூறிய​தாவது: மெகா கூட்​டணி ஆட்​சிக்கு வந்த 20 நாட்​களில் மாநிலம் முழு​வதிலும் ஒவ்​வொரு குடும்​பத்​தைச் சேர்ந்த ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கப்​படும். இது​தான் தேர்​தல் அறிக்​கை​யில் முதல் வாக்​குறு​தி​யாக இடம்​பெற்​றுள்​ளது. டிசம்பர் 1 முதல் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.2,500 வழங்கப்படும்.

ஜீவிகா டிடி திட்​டத்​தின் கீழ் பணிபுரி​கிறவர்​களுக்கு நிரந்தர அரசுப் பணி​யாளர் அந்​தஸ்து வழங்​கப்​படும். இது​போல ஒப்​பந்​தப் பணி​யாளர்​கள் அனை​வரும் நிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள். அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டம் மீண்​டும் அமல்​படுத்​தப்​படும். சிறு​பான்​மை​யினருக்கு அரசி​யல் சாசனம் வழங்​கி​யுள்ள உரிமை​யைப் பாது​காக்​கும் வகை​யில், மத்​திய அரசின் வக்பு திருத்த சட்​டம் நிறுத்தி வைக்​கப்​படும். இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தா​ர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.