மெட்ரோ ரயில் பயணிகள் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்பம்: தனியார் நிறுவனத்துடன் ரூ.48 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: மெட்ரோ ரயில் கதவு​களில் துணி​கள் அல்​லது பைகள் சிக்​கிக்​ கொள்​வ​தால் விபத்​துகள் ஏற்​படு​கின்​றன. இதை தடுக்க மெட்ரோ ரயில்​களில் கதவு​களில் ‘ஆண்டி டிராக் ப்யூச்​சர்’ என்​னும் புதிய தொழில்​நுட்​பம் கொண்ட அமைப்பை நிறுவ, சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் திட்​ட​மிட்​டுள்​ளது.

தற்​போது, 10 மி.மீ. தடிமன் அளவி​லான துணி, பெல்ட் சிக்​கி​னால்​தான் சென்​சா​ரில் பதி​வாகும். புதிய தொழில்​நுட்​பத்​தில் 0.3 மி.மீ. தடிமன் அளவி​லான எந்​தப் பொருள் சிக்​கி​னாலும் சென்​சார் உள்​வாங்​கும் என்​ப​தால் விபத்​துகள் ஏற்​ப​டாது. இதற்​காக, ரூ.48.33 கோடி​யில் ‘பைவ்லி டிரான்​ஸ்​போர்ட் ரயில் டெக்​னாலாஜிஸ் இந்​தி​யா’ என்ற தனி​யார் நிறு​வனத்​துக்கு ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்​குநர் மனோஜ் முன்​னிலை​யில் நிறுவன தலைமை பொது​மேலா​ளர் ராஜேந்​திரன், மற்​றும் தனி​யார் நிறுவன இயக்​குநர் புனீத் மெஹ்ரோத்ரா ஆகியோர் ஒப்​பந்​தத்​தில் நேற்று முன்​தினம் கையெழுத்​திட்​டனர்.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: பயணி​களின் பாது​காப்பை மேம்​படுத்த, நீலம் மற்​றும் பச்சை வழித்​தடங்​களில் இயங்​கும் மெட்ரோ ரயில்​களின் அனைத்து பெட்டி கதவு​களி​லும் ஆண்டிடிராக் தொழில்​நுட்​பம் நிறு​வப்​படும். இதன் சிறப்பு என்​னவென்​றால், இது இழுத்​துச் செல்​லும் விசையை கண்​டறி​யும் திறன் கொண்​டது. ஒரு நபர் அல்​லது பொருள் கதவில் சிக்​கிக்​கொண்ட நிலை​யில் ரயில் நகரத் தொடங்​கும்​போது அது இழுக்​கப்​பட்​டால், இந்த அமைப்பு அதைக் கண்​டறி​யும்.

அப்​படி ஒரு சூழல் ஏற்​படும்​ போது, மெட்ரோ ரயில் தானாகவே அதன் அவசர​கால பிரேக்கை போட்​டு, மெட்ரோ ரயிலை உடனடி​யாக நிறுத்​தி​விடும். அது​மட்​டுமின்​றி, இது உடனடி​யாக ரயில் ஓட்​டுநரின் பார்​வைக்கு அனுப்​பப்​படும். இதன்​மூலம் ஓட்​டுநர் விரை​வாக​வும் உடனடி​யாக​வும் நடவடிக்கை எடுக்க முடி​யும். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.