ஆர்டிஐ-யில் மனு பெற டிஎன்பிஎஸ்சி புதிய வசதி

சென்னை: தகவல் பெறும் உரிமை சட்​டத்​தின்​கீழ் மனுக்​களை இணை​ய​வழி​யில் பெறும் வசதி அறி​முகப்​படுத்​தப்பட்​டிருப்​ப​தாக டிஎன்​பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​.கோபால சுந்​தர​ராஜ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தேர்​வர்​களுக்​கான சேவை​களை இணைவழி​யில் வழங்​கும் வித​மாக தகவல்​பெறும் உரிமைச் சட்​டத்​தின்​கீழ் மனுக்​களை இணை​ய​வழி​யில் பெறும் வசதி தற்​போது ஏற்படுத்​தப்பட்​டுள்​ளது.

தேர்​வர்​கள் இச்சட்​டத்​தின்​கீழ் மனுக்​கள் மற்​றும் மேல்​முறை​யீட்டு மனுக்​களை https://rtionline.tn.gov.in/ என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கலாம். எனவே, தேர்​வர்​கள் தகவல் பெறும் உரிமை சட்டத்​தின்​கீழ் மனுக்​கள் மற்​றும் மேல்​ முறை​யீடு்​களை தேர்​வாணை யத்​துக்கு தபால் மூலம் அனுப்​புவதை தவிர்க்​கு​மாறு கேட்​டுக்​கொள்​ளப்​படுகிறார்​கள். இவ்​வாறு கூறி​யுள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.