எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் நாளை மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது.

நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) சார்​பில் இது​வரை 48 செயற்​கைக்​கோள்​கள் விண்​ணில் நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளன. அதில், கடந்த 2013-ம் ஆண்டு செலுத்​தப்​பட்ட ஜிசாட்-7 (ருக்​மணி) செயற்​கைக்கோளின் ஆயுள்​காலம் விரை​வில் முடிவடைகிறது. அதற்கு மாற்றாக சுமார் ரூ.1,600 கோடி​யில்அதிநவீன சிஎம்​எஸ்​-03 (ஜி​சாட்​-7ஆர்) செயற்கைக்​கோளை இஸ்ரோ வடிவ​மைத்​துள்ளது.

ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எல்​விஎம்-3 (ஜிஎஸ்​எல்வி மார்க்​-3) ராக்​கெட் மூலம் இந்த செயற்​கைக்​கோள் நாளை (நவ.2) மாலை 5.26 மணிக்கு திட்டமிட்டபடி விண்​ணில் செலுத்​தப்படஉள்ளது. ராக்கெட் ஏவுதலுக்​கான 24 மணிநேர கவுன்ட்​-ட​வுன்இன்று மாலை 5.30 மணி அளவில் தொடங்க உள்​ளது. இதையொட்​டி, இறு​தி​க்கட்​டப் பணி​களில் இஸ்ரோ விஞ்​ஞானிகள் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர்.

சிஎம்​எஸ்​-03 தொலைத் தொடர்பு செயற்​கைக்​கோள் 4,410 கிலோ எடை கொண்​டது. இது குறைந்​த​பட்​சம் 170 கி.மீ. தூரம், அதி​கபட்​சம் 29,970 கி.மீ. தொலைவு கொண்ட புவிவட்​டப்பாதை​யில் நிலைநிறுத்​தப்பட உள்​ளது. இது​வரை புவிவட்ட சுற்​றுப்​பாதைக்கு ஏவப்​பட்​ட​தில் இது​தான் அதி​கபட்ச எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்​கைக்​கோள் ஆகும்.

இதில் விரிவுபடுத்​தப்​பட்ட மல்​டி பேண்ட் தொழில்​நுட்ப வசதி​கள் உட்பட பல்வேறுநவீன அம்​சங்​கள் இடம்பெற்​றுள்ளன. இந்​திய கடற்​படை, ராணுவத்​தின் பணி​களுக்​காக இந்த செயற்​கைக்​கோள் பயன்​படுத்​தப்பட உள்​ளது. இந்​தி​யக் கடலோர எல்​லைகளை கண்​காணிப்​பதுடன், போர்க் கப்​பல்​கள் – விமானங்​கள் இடையே தொலைத் தொடர்பு சேவையை மேம்​படுத்தி பாது​காப்​பான​தாக வழங்​கும். ஒட்​டுமொத்​தத்​தில் கடல்​சார் பாது​காப்பை அதி​கரிப்​பதே இதன் முக்​கிய நோக்​கம். இது எல்​விஎம்-3 ராக்​கெட்​டின்7-வது ஏவுதல் திட்​டம் ஆகும். இதற்கு முன்பு சந்​திர​யான்-3விண்​கலம் இந்த ராக்​கெட் மூல​மாக வெற்​றிகர​மாக செலுத்​தப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது. செயற்கைக்கோள் ஏவுதலை முன்னிட்டு தேவையான முன்னேற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.