வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: ராகுல் அரைசதம்.. இந்தியா சிறப்பான தொடக்கம்

ஆமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக தேஜ்நரின் சந்தர்பால் மற்றும் ஜான் கேம்ப்பெல் களமிறங்கினர். … Read more

கடல் வழியாக காசாவிற்கு நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற கிரேட்டா தன்பெர்க் தடுத்து நிறுத்தம்

ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என … Read more

நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

கரூர் துயரச் சம்பவம்: முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 12 கேள்விகள்

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில், மற்ற கட்சிகளுக்கு ஒதுக்காதது ஏன்? விஜய் மீது செருப்பு வீசப்பட்டதையும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதையும் காணொளிகள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் சிலர் கூறினர். … Read more

ம.பி.: நவராத்திரி விழாவில் சோகம்; டிராக்டர் நீரில் மூழ்கி 11 பேர் பலி

இந்தூர், வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக விஜயதசமி கொண்டாட்டங்கள் இன்று நடந்தன. இதில், மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதன்படி, டிராக்டர் ஒன்றில் துர்க்கை சிலைகளை ஏற்றியபடி பக்தர்கள் ஊர்வலம் சென்றனர். அப்போது, அந்த டிராக்டர் பந்தனா பகுதிக்கு வந்தபோது, திடீரென ஏரிக்குள் சரிந்தது. இந்த சம்பவத்தில், பக்தர்கள் சிலைகளுடன் ஏரியில் விழுந்தனர். … Read more

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: 129 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்

கொழும்பு, மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் வங்காளதேசம் – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணியின் சிறப்பாக பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 129 ரன்களுக்கு … Read more

எத்தியோப்பியா: தேவாலயத்தில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 36 பேர் பலி

அடிஸ்அபாபா, எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த தேவாலயத்தில் அதிகாலை நேரத்தில் வழிபாடு நடத்த மக்கள் கூடியிருந்தனர். இந்தநிலையில் திடீரென கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 36 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்த மகியாஸ் என்பவர் கூறியதாவது: நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய கூடியிருந்தோம். … Read more

5 போலீஸாருக்கு ‘காந்தியடிகள் காவலர்’ விருது அறிவிப்பு

சென்னை: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் சிறப்​பாக செயல்​பட்ட 5 போலீ​ஸாருக்கு ‘காந்​தி​யடிகள் காவலர்’ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் பாராட்​டத்​தக்க வகை​யில் பணி​யாற்​றியதற்​காக விழுப்​புரம் மண்​டலம், மத்​திய நுண்​ணறி​வு பிரிவு காவல் ஆய்​வாளர் ப.நட​ராஜன், விழுப்​புரம் மாவட்​டம், ஆரோ​வில் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் மா.சத்​யாநந்​தன், கள்​ளக்​குறிச்சி மாவட்​டம், சின்ன சேலம் காவல் நிலைய உதவி ஆய்​வாளர் சு.மணி​கண்​டன், கடலூர் மாவட்​டம், புத்​தூர் காவல் நிலைய உதவி … Read more

இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை: அக்.26 முதல் தொடக்கம்!

இந்தியா சீனா இடையிலான நேரடி விமான சேவை வரும் அக்டோபர் 26 முதல் மீண்டும் தொடங்க உள்ளது. சில தினங்களுக்கு முன்பு சீனா​வின் தியான்​ஜினில் நடந்த ஷாங்​காய் ஒத்​துழைப்பு மாநாட்​டின்​போது சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை சந்​தித்த பிரதமர் நரேந்​திர மோடி இந்தியா சீனா இடையே நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இடையேயான தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த மாத இறுதிக்குள் … Read more

வடமாநிலங்களில் தசரா பண்டிகை கோலாகலம்… ராவணன் உருவ பொம்மைகளை எரித்து கொண்டாட்டம்

நாடு முழுவதும் இன்று விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தொடர்புடைய பல கதைகள் இருந்தாலும், அவற்றில் மிகவும் பிரபலமானது ராமன், ராவணனை விஜயதசமியன்று வீழ்த்தி போரில் வெற்றி பெற்றார் என்பதாகும். இதை நினைவூட்டும் வகையில் வட இந்தியப் பகுதிகளில் இந்நாள், ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ராம பிரானின் அவதார லீலைகள் தொடர்பான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் ராவண வதம் நிகழ்ச்சி … Read more