இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் நிறுவனம் 0 ஆல்ஃபா எலக்ட்ரிக் எஸ்யூவி தாயரிக்கப்பட்டு ஜப்பான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு எலிவேட் போல ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சந்தையின் மதிப்பை அதிகரிக்க இந்நிறுவனம் 2030க்குள் 10 கார்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்தியாவுக்காக பிரத்தியேகமான குழு ஒன்றை உருவாக்கியுள்ள ஹோண்டா இதன் மூலம் செடானை கடந்து பல்வேறு புதிய மாடல்களை சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கவும் ஓருங்கிணைக்கவும் திட்டமிட்டுள்ள நிலையில், α (Alpha) முதல் மாடலாக 0 சீரிஸ் எஸ்யூவி, 4 மீட்டருக்கு குறைந்த நீளமுள்ள காம்பேக்ட் எஸ்யூவி என 10க்கு மேற்பட்ட மாடல்களை 2030க்குள் வெளியிட உள்ளதாக ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் ஹோண்டாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தோஷிஹிரோ மிபே இந்த தயாரிப்பு திட்டத்தை உறுதிப்படுத்தினார்.
பேட்டரிக்கான செல்களை இந்தோனேசியாவிலிருந்து CATL மற்றும் LG ஆகியவற்றில் பெற உள்ள நிலையில், எலக்ட்ரிக் மட்டுமல்லாமல் ஹோண்டா அதன் ஹைப்ரிட் போர்ட்ஃபோலியோவை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மிகவும் முக்கியமான ஒன்றான விலையில் எந்த சமரசம் செய்யாமல் போட்டியாளர்களுக்கு இணையாகவும், சிறந்த தரம், கையாளுதல் மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கும்.
எலக்ட்ரிக், ஹைபிரிட் மட்டுமல்லாமல் மாற்று எரிபொருள்கான சிஎன்ஜி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளது.