காலம்காலமாக திமுக போலி வாக்காளர்களை உருவாக்கியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு 

கோவை: ​போலி வாக்​காளர்​களை காலம் கால​மாக உரு​வாக்கி வைத்​துள்​ளது திமுக என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்ணா​மலை கூறி​னார்.

கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அமைச்​சர் நேரு மீது ரூ.888 கோடி ஊழல் தொடர்பான கடிதத்தை டிஜிபி-க்கு அமலாக்​கத் துறை அனுப்​பி​யுள்​ளது. அமைச்​சர் நேரு, அவரின் சகோ​தரர்​கள் ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன் மற்​றும் ‘ட்ரூ வேல்யூ ஹோம்​ஸ்’ நிறு​வனத்​தில் பணி​யாற்​றும் 4 பேர் இணைந்து ஊழலில் ஈடு​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக இது​வரை வழக்கு பதிவு செய்​ய​வில்​லை.

பிஹார் தொழிலா​ளர்​கள் விவ​காரத்​தில் தயாநிதி மாறன் உள்​ளிட்ட திமுக​வினரின் நடவடிக்​கைகளைத்​தான் பிரதமர் விமர்​சித்​துள்​ளார். ஆனால், பிரதமர் சொல்​லாத விஷ​யத்தை கூறிய​தாக தமிழக முதல்​வர் திரித்​துப் பேசி​யுள்​ளார். தமிழகத்​தில் சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​கள் நவ. 3-ம் தேதி தொடங்​கு​கின்​றன.

போலி வாக்​காளர்​களை காலம் கால​மாக உரு​வாக்கி வைத்​துள்​ளது திமுக. எனவே, இந்​திய தலைமை தேர்​தல் அதி​காரி, தமிழக தேர்​தல் அதி​காரி​களை தனது கட்​டுப்​பாட்​டின்​கீழ் கொண்​டு​வந்து பணி​களை மேற்​கொள்ள வேண்​டும்.

பதவி என்​பது வெங்​கா​யம் போன்​றது. பதவி இருந்​தால்​தான் வேலை செய்ய வேண்​டு​மா? எனக்கு என் உயரம் தெரி​யும். பிரதமர் மீது நான் வைத்​துள்ள நம்​பிக்கை குறைய​வில்​லை. நான் மாற்​றத்​துக்​காக போராடு​கிறேன். அமெரிக்க அதிபர் வரி விதிப்​பால் கோவை, திருப்​பூர் மாவட்​டங்​களில் தொழில் துறை கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது. மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் பிரச்​சினை​களை தீர்த்து வரு​கிறார். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.